search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மழை நிவாரண பணிகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை களம் இறக்க வேண்டும்
    X

    கோப்பு படம்.

    மழை நிவாரண பணிகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை களம் இறக்க வேண்டும்

    • தி.மு.க. வலியுறுத்தல்
    • கட்டிட தொழிலாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டில் முடங்கி உள்ளனர்.

    புதுச்சேரி:

    எதிர்கட்சி தலைவரும் புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் மழையால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    கட்டிட தொழிலாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டில் முடங்கி உள்ளனர்.

    தொடர் மழையால் புதுவையின் பல்வேறு பகுதிகளில் தாழ்வாக உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. சாலைகளில் மழைநீருடன், கழிவுநீரும் சேர்ந்து தேங்கி உள்ளதால் பல இடங்களில் சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

    எனவே இன்னும் மாவட்ட நிர்வாகம் தூங்கிக் கொண்டிருக்காமல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை களத்தில் இறக்கி நிவாரணப் பணிகளை முடுக்கிவிட வேண்டும். நீர்நிலைகளை கண்காணித்து வீடுகள் இழந்த மக்களுக்கு உடனடியாக மாற்று இடம் வழங்க வேண்டும்.

    வேலைக்கு செல்ல முடியாத மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி கிராமங்கள்தோறும் மருத்துவக் குழுக்கள் அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

    குறிப்பாக மழைக்கால நோய் வராமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட வீடுகள், விளைநிலங்கள் குறித்து அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு எம்.எல்.ஏ.க்களின் துணை யோடு மக்கள் துயர்தீர்க்க துரித நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×