search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மளிகை கடை ஊழியர் எலி மருந்து தின்று தற்கொலை
    X

    கோப்பு படம்.

    மளிகை கடை ஊழியர் எலி மருந்து தின்று தற்கொலை

    • வில்லியனூரில் கடன் பிரச்சினையில் மளிகை கடை ஊழியர் எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.
    • இதற்கிடையே சித்தார்த்தன் கடன் பிரச்சினை காரணமாக மனஉளைச்சலில் இருந்து வந்தார்.

    புதுச்சேரி:

    வில்லியனூரில் கடன் பிரச்சினையில் மளிகை கடை ஊழியர் எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.

    வில்லியனூர் பாண்டியன் நகர் விரிவாக்கத்தை அடுத்த சிவவேலன் நகரை சேர்ந்தவர் சித்தார்த்தன் (வயது47). இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் ஒரு மளிகை கடையில் வேலை செய்து வந்தனர்.

    இதற்கிடையே சித்தார்த்தன் கடன் பிரச்சினை காரணமாக மனஉளைச்சலில் இருந்து வந்தார். இதுபற்றி அவர் அடிக்கடி தனது மனைவியிடம் கூறி வருத்தப்பட்டு வந்தார். அவருக்கு ராஜலட்சுமி ஆறுதல் கூறி சமாதானம் செய்து வந்தார்.

    கடந்த ஒரு வாரமாக கடனை எப்படி அடைப்பேன் என்று தெரியவில்லை. மகனை நன்றாக பார்த்துக்கொள் என்று தொடர்ந்து மனைவியிடம் கூறி வந்தார்.

    சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் மளிகை கடைக்கு வேலைக்கு சென்றனர். பின்னர் பகல் 2 மணியளவில் உடல்நிலை சரியில்லை என்று கூறி சித்தார்த்தன் மளிகை கடையில் இருந்து வீட்டுக்கு வந்தார்.

    சித்தார்த்தனுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே அவரை ராஜலட்சுமி வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றார், அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் மருந்து-மாத்திரை கொடுத்து அனுப்பினர்.

    ஆனால் வீட்டுக்கு வந்த போது சித்தார்த்தனுக்கு உடல் நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து ராஜலட்சுமி உறவினர்கள் உதவியுடன் கணவரை புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு சித்தார்த்தனிடம் டாக்டர்கள் விசாரித்த போது எலி மருந்து தின்று விட்டுவதாக தெரிவித்தார். இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சித்தார்த்தன் பரிதாபாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது மனைவி ராஜலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×