என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அரசு பணியாளர் நல கூட்டமைப்பினர் வேலை நிறுத்தம் செய்து போராட்டம்
    X

    பணி நிரந்தரம் வழங்க கோரி அரசு பணியாளர் நல கூட்டமைப்பினர் வேலை நிறுத்தம் செய்து போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    அரசு பணியாளர் நல கூட்டமைப்பினர் வேலை நிறுத்தம் செய்து போராட்டம்

    • முதல்-அமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறை வேற்றக்கோரி சுதேசிமில் அருகே வேலைநிறுத்தம் செய்து போராட்டம் நடத்தினர்.
    • பல்நோக்கு ஊழியர்கள் காலி பணியிடத்தை வவுச்சர் ஊழியர்களை கொண்டு நிரப்ப வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு துறைகளில் 10 ஆண்டாக பணிசெய்த ஊழியர்களுக்கு பணிநி ரந்தரம் செய்யப்பட்டு, ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்கப்ப டும் என முதலமைச்சர் சட்டசபையில் அறிவித்தார்.

    இதை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை எனக்கூறி அரசு பணியா ளர்கள் நல கூட்டமைப்பினர் ஏற்கனவே பல போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் முதலமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறை வேற்றக்கோரி சுதேசிமில் அருகே வேலைநிறுத்தம் செய்து போராட்டம் நடத்தினர்.

    போராட்டத்துக்கு கூட்டமைப்பு தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் நுற்றுக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்றனர். பொதுப்பணித்துறையில் பணிபுரியும் ஆயிரத்து 500 வவுச்சர் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். பல்நோக்கு ஊழியர்கள் காலி பணியிடத்தை வவுச்சர் ஊழியர்களை கொண்டு நிரப்ப வேண்டும்.

    மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச சட்டக்கூலி ரூ.852 வழங்க வேண்டும். விடுபட்ட 117 ஊழியர்களை பொதுப்பணித்துறையில் இணைத்து பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    Next Story
    ×