search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரும்
    X

    கோப்பு படம்.

    விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரும்

    • அமைச்சர் நமச்சிவாயம் உறுதி
    • காலிபணியிடங்கள் நிரப்ப தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    புதுச்சேரி:

    புதுவை மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது.இதற்கு மின் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மின்துறை சொத்துகள் அடிப்படையில், மத்திய அரசு அறிவுறுத்தல்படி மீண்டும் மறு டெண்டர் வைக்கப்படவுள்ளது.

    புதுவை மின்துறை தனியார்மயமானால் விவசாயத்துக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்தனர் அதற்கு அரசு தரப்பில விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் தொடரும் என உறுதி அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் புதுவையில் விவசாய நிலங்களில் இலவச மின்சாரம் பெறும் பம்ப் செட் மோட்டார்களில் மின்துறை சார்பில் மின்மீட்டர் பொருத்தத் தொடங்கியுள்ளனர். இது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மின்துறையில் உயர் அதிகாரிகளை விவசாயிகள் சந்தித்து மனுல.வும் அளித்தனர்.

    இதுதொடர்பாக மின்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    ஸ்மார்ட் மீட்டர் பொருத்தவில்லை. தவறாக புரிந்து கொண்டுள்ளனர். புதிய எனர்ஜி மீட்டரை பொருத்துகிறோம். எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படு கிறது என்பதை கண்டறியவே பொருத்துகி றோம். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது. மின்கட்டண மானியத்தை அரசுதான் செலுத்துகிறது. கட்டணம் வசூலிக்க மாட்டோம். இலவச மின்சாரம் எதிர்காலத்திலும் தொடரும்..

    10 சதவீதம் இடஒதுக்கீடு அமைச்சரவை ஒப்புதல் கொடுத்து கவர்னருக்கு அனுப்பியுள்ளோம். அவர் மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பிய பின் சென்டாக் கலந்தாய்வு தொடங்கும். புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த வசதி வாய்ப்புகள் புதுவையில் உள்ளது. காலிபணியிடங்கள் நிரப்ப தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    கல்வித்துறையில் காலி பணியிடம் விரைவில் நிரப்பப்படும். வெகுவிரைவாக போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தேர்வு நடத்தவுள்ளோம். மிகவும் பிற்படுத்தப்பட்டவர் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்குள் நடந்து விடும். அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு பயிற்சி தர உள்ளோம். பயிற்சி 2 ஆண்டுகள் நடக்கும்

    இவ்வாறு நமச்சிவாயம் கூறினார்.

    Next Story
    ×