என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
தொழிலாளியிடம் ரூ.2 லட்சம் மோசடி
- பணத்தை திருப்பி கேட்ட போது தாக்கி கொலை மிரட்டல்
- தகாத வார்த்தைகளால் திட்டிய ரமேஷ் என்னிடமே பணத்தை திருப்பி கேட்கி றாயா? என்று கூறி வடிவேலுவை தாக்கினார்.
புதுச்சேரி:
திருபுவனை அருகே மதகடிப்பட்டு பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வடிவேலு (வயது44). தொழிலாளி.
இவர் தனது உறவினரின் மகனுக்கு அரசு வேலை வாங்கி தரக்கோரி கலித்தீர்த்தாள்குப்பம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவரிடம் கடந்த
2018-ம் ஆண்டு ரூ.2 லட்சம் கொடுத்தார். ஆனால் ரமேஷ் அரசு வேலை வாங்கி தரவில்லை.
இதையடுத்து கொடுத்த பணத்தை பலமுறை திருப்பி கேட்டும் ரமேஷ் கொடுக்க வில்லை. இந்தநிலையில் நேற்று மாலை மதகடிப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவில் ரமேஷ் நின்றுக்கொண்டிருந்தார். இதுபற்றி அறிந்த வடிவேலு தனது நண்பர் அருணாச்சலம் என்பவருடன் சென்று ரமேசிடம் பணத்தை திருப்பி கேட்டார். அப்போது தகாத வார்த்தைகளால் திட்டிய ரமேஷ் என்னிடமே பணத்தை திருப்பி கேட்கி றாயா? என்று கூறி வடிவேலுவை தாக்கினார்.
மேலும் இனிமேல் பணத்தை திருப்பி கேட்டால் கூலிபடையை வைத்து கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து ரமேஷ் திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






