என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    இரவலுக்கு வாங்கி சென்று சொகுசு காரை விற்று மோசடி
    X

    கோப்பு படம்.

    இரவலுக்கு வாங்கி சென்று சொகுசு காரை விற்று மோசடி

    • பலமுறை கேட்டும் அவர்கள் பல்வேறு காரணங்களை கூறி காரை ஒப்படைக்காமல் ஏமாற்றி வந்தனர்.
    • வைத்திலிங்கமும் சட்ட விரோத செயலுக்கு பயன்படுத்தலாம் என சந்தேகப்படுவதாக தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் தனக்கு சொந்தமாக சொகுசு கார் வைத்திருந்தார்.

    இவரது சொகுசு காரை இவரது நண்பரான சேலியமேடு பகுதியை சேர்ந்த செல்வமூர்த்தி என்பவர் முதலியார் பேட்டை ஜான்சிநகரை சேர்ந்த வைத்திலிங்கம் கடந்த 2019 -ம் ஆண்டு இரவலுக்கு வாங்கி கொடுத்தார்.

    ஆனால் அந்த காரை திருப்பி கொடுக்கவில்லை. பலமுறை கேட்டும் அவர்கள் பல்வேறு காரணங்களை கூறி காரை ஒப்படைக்காமல் ஏமாற்றி வந்தனர்.

    பின்னர் விசாரித்த போது ராமமூர்த்தியின் சொகுசு காரை அரியாங்குப்பம் ஆர்.கே.நகரை சேர்ந்த ஜெகஜீவன்ராம் மனைவி ஜெயலட்சுமியிடம் வைத்திலி ங்கம் விற்றது தெரியவந்தது.

    மேலும் அந்த காரை கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த வெங்கடேச பெருமாள் என்பவர் ஓட்டி வருவதும் தெரியவந்தது.

    இதையடுத்து ராமமூர்த்தி முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது சொகுசு காரை இரவலுக்கு வாங்கி சென்று செல்வமூர்த்தியும், வைத்திலிங்கமும் சட்ட விரோத செயலுக்கு பயன்படுத்தலாம் என சந்தேகப்படுவதாக தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×