என் மலர்
புதுச்சேரி

பா.ஜனதா சார்பில் உருளையன்பேட்டை தொகுதி மக்களுக்கு மின்விளக்குகள் வழங்கப்பட்ட காட்சி.
உருளையன்பேட்டை மக்களுக்கு மின்விளக்கு
- புதுவை உருளையன்பேட்டை தொகுதி திடீர் நகர் பகுதியில் பட்டியல் இன மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சி புதுவை மாநில பாரதீய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில் நடத்தப்பட்டது.
- இதனைத் தொடர்ந்து திடீர் நகர் பகுதி மக்களின் முதல் கோரிக்கையான தெரு விளக்கு பட்டியல் அணி சார்பில் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை உருளையன்பேட்டை தொகுதி திடீர் நகர் பகுதியில் பட்டியல் இன மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சி புதுவை மாநில பாரதீய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில் நடத்தப்பட்டது.
நகர் மாவட்ட பட்டியல் அணி தலைவர் வெற்றிவேல் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். பட்டியல் அணி மாநில தலைவர் தமிழ்மாறன் மக்களோடு கலந்துரையாடி மக்களின் குறைகளை கேட்டார்.
இதனைத் தொடர்ந்து திடீர் நகர் பகுதி மக்களின் முதல் கோரிக்கையான தெரு விளக்கு பட்டியல் அணி சார்பில் வழங்கப்பட்டது. மாநிலத் தலைவர் சாமிநாதன், பொதுச் செயலாளர் மோகன் குமார், பட்டியல் அணியின் மாநில தலைவர் தமிழ்மாறன் ஆகியோர் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் தெருவிளக்குகளை திடீர் நகர் பகுதி மக்களிடம் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியின் போது மகேஸ் ரெட்டி ரஞ்சித், மாநில பட்டியல் அணி துணைத்தலைவர்கள் எஸ்.கே.சி. கஜேந்திரன், ராஜேஸ்வரி, செயற்குழு உறுப்பினர்கள் தட்சிணாமூர்த்தி, காமாட்சி சிறப்பு அழைப்பாளர் குணாளன், உழவர்கரை மாவட்ட தலைவர் ராஜகுரு அம்பேத்கர், மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.






