என் மலர்
புதுச்சேரி

போதை பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்ற காட்சி.
போதை பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு
- வில்லியனூர் அடுத்த ஊசுட்டேரி ஸ்ரீ பாரத் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
- பள்ளியின் தாளாளர் டாக்டர். சந்தானகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார்.
புதுச்சேரி:
வில்லியனூர் அடுத்த ஊசுட்டேரி ஸ்ரீ பாரத் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
பள்ளியின் தாளாளர் டாக்டர். சந்தானகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார். பள்ளி முதல்வர் சாந்திஜெயசுந்தர் முன்னிலை வகித்தார். இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக போதைப்பொருள் தடுப்பு போலீஸ் சூப்பிரண்டு வம்சீதர ரெட்டி, சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் பங்கேற்று போதை பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும் போதைப் பொருளால் இளைஞர்கள் எவ்வாறு பாதிப்படைகின்றனர் என்பது குறித்து பேசினர். கருத்தரங்கில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






