என் மலர்
புதுச்சேரி

நீர்நிலைகளில் தூர்வாரும் பணி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி.
நீர்நிலைகளில் தூர்வாரும் பணி-சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்
- நீர் நிலைகளை ரூ.22.50 லட்சம் மதிப்பில் தூர்வாரி ஆழப்படுத்தும் பணியினை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.
- நல்லவாடு மீனவ கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் புதிய நபர்களுக்கு பணி அட்டையை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்.
புதுச்சேரி:
அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் மணவெளி தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் உள்ள நீர் நிலைகளை ரூ.22.50 லட்சம் மதிப்பில் தூர்வாரி ஆழப்படுத்தும் பணியினை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.
இந்த பணியின் கீழ் நோணாங்குப்பம் பகுதியில் உள்ள தீர்த்தகுளம் ரூ.1.41 லட்சம், அபிஷேகப்பாக்கம் பகுதியில் உள்ள சம்போடை குளம் ரூ.3.45 லட்சம், பூரணாங்குப்பம் பகுதியில் உள்ள சந்திர குளம் ரூ.1.29 லட்சம், கொருக்கமேடு பகுதியில் உள்ள பரப்பன்குளம் ரூ.1.95 லட்சம், அபிஷேகப்பாக்கம் பகுதியில் தேடுவார் நத்தம் முதல் வண்ணான் குளம் வரை உள்ள ஊரல் வாய்க்கால் ரூ.6.48 லட்சம், டி.என்.பாளையம் பகுதியில் உள்ள பெரியகுட்டை குளம் ரூ.6.48 லட்சம் மதிப்பிலும் தூர்வாரி ஆழப்படுத்தி சுத்தம் செய்யப்பட உள்ளது. தொடர்ந்து நல்லவாடு மீனவ கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் புதிய நபர்களுக்கு பணி அட்டையை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்.
நிகழ்ச்சியின் போது அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரி காசிநாதன், இளநிலை பொறியாளர் சிவஞானம், பணி ஆய்வாளர் நற்குணம், பா.ஜனதா தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், கிருஷ்ணமூர்த்தி, என்.ஆர்.காங்கிரஸ் தொகுதி தலைவர் மனோகர், கூட்டுறவு கடன் சங்க இயக்குனர் சக்திவேல், பூபாலன், ஹேமாமாலினி, மாயகிருஷ்ணன், செல்வி, மோகன், ராஜா, வீரபாலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.






