என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் வீடு வீடாக வழங்கல்
    X

    பெரிய முதலியார்சாவடியில் நகர் மன்றத் தலைவர் எஸ்.எஸ் ஜெயமூர்த்தி தலைமையில் பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கனை தி.மு.க.வினர் வீடு வீடாக வழங்கிய காட்சி.

    பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் வீடு வீடாக வழங்கல்

    • பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசு அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பான ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ. ஆயிரம் ரொக்கம் வழங்க உள்ளது.
    • கோட்டகுப்பம் நகராட்சிக்குட்பட்ட அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பினை நகர்மன்ற தலைவர் எஸ்.எஸ் ஜெயமூர்த்தி பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைக்கிறார்.

    புதுச்சேரி:

    பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசு அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பான ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ. ஆயிரம் ரொக்கம் வழங்க உள்ளது.

    வருகின்ற 9-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி தொடங்கி வைக்கிறார். கோட்டகுப்பம் நகராட்சிக்குட்பட்ட அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பினை நகர்மன்ற தலைவர் எஸ்.எஸ் ஜெயமூர்த்தி பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைக்கிறார்.

    இந்நிலையில் கோட்டகுப்பம் நகராட்சிக்குட்பட்ட பெரியமுதலியார்சாவடி முதல் வார்டில் கோட்டகுப்பம் நகர் மன்ற தலைவர் எஸ்.எஸ் ஜெயமூர்த்தி தலைமையில் வீடு வீடாகச் சென்று தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் வழங்கப்பட்டது.

    இதில் தி.மு.க. நிர்வாகிகள் ஏழுமலை, டாக்டர்.வினோபாரதி, சேகர், ஏழுமலை, விஜயரங்கம், சக்திவேல், முருகானந்தம், விநாயகம், சுதாகர், தேவராஜ், ரமேஷ், அய்யப்பன், ஜானகி, சிவகுமார், பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×