search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    4 வழிச்சாலை விரிவாக்க பணிக்காக கோவிலை இடித்து அகற்றம்-பொதுமக்கள் எதிர்ப்பு
    X

    அம்மன் கோவிலை தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் போலீசார் உதவியுடன் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்த காட்சி.

    4 வழிச்சாலை விரிவாக்க பணிக்காக கோவிலை இடித்து அகற்றம்-பொதுமக்கள் எதிர்ப்பு

    • நெடுஞ்சாலையில் திரண்டதால் பரபரப்பு
    • சாலையோரம் இருந்த அம்மன் கோவிலை தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் போலீசார் உதவியுடன் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்தனர்.

    புதுச்சேரி:

    விழுப்புரம்- நாகை இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இச்சாலை விரிவாக்கத்திற்காக சாலையோரம் உள்ள வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள் ஆகிய வற்றை இடித்து அகற்றி வருகின்றனர். அரியூர் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டு சர்வீஸ் சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக சாலையோரம் இருந்த அம்மன் கோவிலை தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் போலீசார் உதவியுடன் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்தனர்.

    இதனை அறிந்த அப்பகுதி மக்கள் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து நெடுஞ்சாலையில் திரண்டனர். போலீசார் அவர்களை மறித்து அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினர். இதனால் போலீசாருக்கும், ஊர் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இருப்பினும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோவிலை இடித்து தரைமட்ட மாக்கினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×