என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
பயிர் காப்பீடு விழிப்ணர்வு முகாம்
- பயிர் காப்பீடு பிரச்சார வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு விளக்க கையேடு வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, மதகடிப்பட்டு உழவர் உதவியகம் மூலம் பி.ஸ்.பாளையம் கிராமத்தில் பயிர் காப்பீடு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
பி.ஸ்.பாளையம், வாதானூர், சண்ணியாசிக்குப்பம், கலிஜித்தால்குப்பம், சிலுக்காரிப்பாளையம், குச்சிப்பாளையம், மதகடிப்பட்டு, மதகடிப்பட்டு பாளையம் கிராமங்களில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர். வேளாண் அலுவலர் நடராஜன், விவசாயிகளை வரவேற்று, பயிர் காப்பீடு அவசியம் குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில் பஜாஜ் அலையன்ஸ் காப்பீடு நிறுவனத்தின் மேலாளர் சக்திவேல், சொர்ணாவாரி பருவ நெல் பயிர் காப்பீடு, வாழை பயிர் காப்பீடு குறித்து விளக்கம் அளித்தார். பயிர் காப்பீடு பிரச்சார வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு விளக்க கையேடு வழங்கப்பட்டது.
இம்முகாமிற்கான ஏற்பாடுகளை உதவிவேளாண் அலுவலர் பக்கிரி, கிராம விரிவாக்கப் பணியாளர் புவனேஸ்வரி, ஆத்மா மேலாளர் சிரஞ்சீவி, செயல் விளக்க உதவியாளர் வள்ளியம்மாள், அலுவலக உதவியாளர் சண்முகம் ஆகியோர் செய்திருந்தனர்.






