என் மலர்
புதுச்சேரி

முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் சம்பத் எம்.எல்.ஏ கோரிக்கை மனு அளித்த காட்சி.
உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு
- முதல்-அமைச்சரிடம் சம்பத் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
- குடும்ப உறுப்பினர்களுக்கு உடல் தானம் செய்வதை உணர்வுபூர்வமாக கருதி தானம் செய்வதை நிறுத்தி விடுகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை தி.மு.க. இளைஞரணி அமைப்பா ளரும் முதலியார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான சம்பத் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதா வது:-
உடல் உறுப்பு தேவைக்கும் அவை கிடைப்பதற்கும் சராசரி இடைவெளி மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிகம் உள்ளது. சாலை விபத்தில் ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகின்றன.
ஆனால் இவர்களின் பெரும்பாலானவர்கள் உடல் தானம் செய்வதில்லை. குடும்ப உறுப்பினர்களுக்கு உடல் தானம் செய்வதை உணர்வுபூர்வமாக கருதி தானம் செய்வதை நிறுத்தி விடுகின்றனர்.
இதன் பொருட்டே தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உடல் தானம் செய்பவர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.
இது பொதுமக்களிடம் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது . ேமலும் தற்போது உடல் தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று மருத்துவத்துறையினர் கருத்து தெரிவிக்கின்றனர்.
சாமானியனின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடப்பது என்பது அவரின் குடும்பத்தினருக்கு மிகப்பெரிய கவுரவத்தை கொடுக்கும் அது மட்டு மில்லாமல் உடல் உறுப்பு மாற்று என்பது மிகப்பெரிய வணிகமாவதையும் தடுக்கவும் உடல் உறுப்பு பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களையும் இது கலைத்து விடும்.
எனவே புதுவையிலும் உடல் உறுப்பு தானம் செய்யும் நபர்களின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் செய்யப்படும் என்ற திட்டத்தை நடைமு றைப்ப டுத்தத் தேவையான நட வடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






