search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சென்டாக் ஊழல் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு
    X

    கோப்பு படம்.

    சென்டாக் ஊழல் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு

    • சேர்க்கை ஆண்டுதோறும் சென்டாக் அதிகாரிகள் சரியாக நடத்துவதில்லை.
    • அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்பட்டு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை இண்டியா கூட்டணி சார்பாக கட்சி தலைவர்கள் கூட்டம் சிபிஎம் கட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது.

    கூட்டத்துக்கு மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். தி.மு.க. மாநில அமைப்பாளரும்,எதிர்கட்சி தலைவர்சிவா எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. நீல.கங்காதரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம்,துணை செயலாளர் சேதுசெல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், மார்க்சிஸ்டு லெனிஸிட்டு கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினர் சோ.பாலசுப்பரமணியன், மார்க்சிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்முருகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் வெ.பெருமாள்,ராமச்சந்திரன்,தமிழ்ச்செல்வன்,கொளஞ்சியப்பன், கலியமூர்த்தி,பிரபுராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்துக்கு பிறகு நிருபர்களிடம் எதிர்க்கட்சித்தலைவர் சிவா கூறியதாவது:

    புதுவையில் மருத்துவ மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் சென்டாக் அதிகாரிகள் சரியாக நடத்துவதில்லை. தொடர்ந்து அரசு குழப்பமாக செயல்பட்டு நடப்பாண்டு மோசடியும், ஊழலும் நடந்துள்ளது. சில அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்பட்டு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

    இதுகுறித்து புகார் தெரிவித்தும் அரசு பொறுப்பான பதில் தரவில்லை. மருத்துவ கவுன்சில் உத்தரவு களைக்கூட மதிக்கவில்லை. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கான உச்சநீதிமன்ற உத்தரவும் மதிக்கப்படவில்லை. இவற்றையெல்லாம் விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்.இதற்காக நீதிமன்றத்தை நாடவுள்ளோம். இதை மக்களிடம் கொண்டு செல்ல பிரச்சா ரமும் செய்யவுள்ளோம்.

    நாடுமுழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கை இயல்பாக நடக்கும்போது ஆண்டுதோறும் புதுவையில் மட்டும் குழப்பம் நிலவுகிறது. உரிய இடங்களைக்கூட கேட்டு பெறவில்லை. முழுமையாக நீதிபதி தலைமை யில் விசாரிக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×