என் மலர்
புதுச்சேரி

கருவடிகுப்பத்தில் வசிக்கும் நரிக்குறவர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஷாஜகான் தலைமையில் கதர் ஆடை அணிவிக்கப்பட்ட காட்சி.
நரிக்குறவர்களுக்கு கதர் ஆடை வழங்கிய காங்கிரஸ்
- மக்களுக்கு முன்னாள் அமைச்சர் ஷாஜகான் தலைமையில் நரிக்குறவர்களுக்கு கதர் ஆடை வழங்கப்பட்டது.
- காங்கிரஸ் கட்சி மாநில வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
உலக பழங்குடியினர் மக்கள் தின நாளை முன்னிட்டு புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கட்சியின் சார்பாக காலாப்பட்டு சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட கருவடிக்குப்பம், நரிக்குறவர் காலனியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு முன்னாள் அமைச்சர் ஷாஜகான் தலைமையில் நரிக்குறவர்களுக்கு கதர் ஆடை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோரும் நரிக்குறவர் காலனியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு கதர் ஆடை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் மரியாதை செய்தனர்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி மாநில வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story






