என் மலர்

  புதுச்சேரி

  புதுவை ஆசிரியருக்கு-கவர்னர் தமிழிசை வாழ்த்து
  X

  கோப்பு படம்.

  புதுவை ஆசிரியருக்கு-கவர்னர் தமிழிசை வாழ்த்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்வியல் மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் ஆசிரியர்களை தேர்வு செய்து, மத்திய கல்வி அமைச்சகம் மூலம் ஆண்டுதோறும் “தேசிய நல்லாசிரியர் விருது” வழங்கப்பட்டு வருகிறது.
  • 2022-ம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்க–ளின் பட்டியல் வெளியிடப்பட்டது.

  புதுச்சேரி:

  மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்வியல் மேம்பாட்டிற்காக அர்ப்ப–ணிப்புடன் பணியாற்றி வரும் ஆசிரியர்களை தேர்வு செய்து, மத்திய கல்வி அமைச்சகம் மூலம் ஆண்டுதோறும் "தேசிய நல்லாசிரியர் விருது" வழங்கப்பட்டு வருகிறது.

  2022-ம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்க–ளின் பட்டியல் வெளி–யிடப்பட்டது. அதில், புதுவை முதலியார்பேட்டை அர்ச்சுன சுப்பராய நாயக்கர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் அரவிந்த–ராஜாவுக்கு 'தேசிய நல்லாசிரியர் விருது' அறிவிக்கப்பட்டது.

  தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர் அரவிந்தராஜாவுக்கு, கவர்னர் தமிழிசை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து ச்செய்தியில், 2022-ம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருது பெற புதுவையில் இருந்து தேர்வு செய்யப்பட்டிருக்கும் முதலி யார்பேட்டை, அர்ச்சுன சுப்பராய நாயக்கர் அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் அரவிந்தராஜாவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  ஆசிரியர் பணியில் சிறப்பாக செயல்பட்டு புதுவை மாநிலத்தின் கல்வி வளர்ச்சிக்கு மேலும் பங்காற்ற வேண்டும். புதுவை மாநிலத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்.

  இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

  Next Story
  ×