என் மலர்
புதுச்சேரி

பொதுமக்கள் தொகுதி எம்.எல்.ஏ.அனிபால் கென்னடியிடம் முறையிட்ட காட்சி.
ஆக்கிரமித்த வாய்க்கால் அகற்றம்-அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. நடவடிக்கை
- புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட தமிழ்த்தாய் நகரில் உள்ள கம்பன் வீதியில் எல் வடிவ வாய்க்காலை தனிநபரின் சொந்த பயன்பட்டிற்காக சிமெண்ட் வைத்து வாய்க்காலை மூடி இருந்தார்.
- உடனே சிமெண்ட் வைத்து மூடிய வாய்க்காலை உடைக்கும் படி அறிவுறுத்தினார். எம்.எல்.ஏ.வின் வேண்டுதலை ஏற்று உடனே மூடிய வாய்க்காலை சீர் செய்து கொடுத்தனர்.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட தமிழ்த்தாய் நகரில் உள்ள கம்பன் வீதியில் எல் வடிவ வாய்க்காலை தனிநபரின் சொந்த பயன்பட்டிற்காக சிமெண்ட் வைத்து வாய்க்காலை மூடி இருந்தார்.
இதனால் அங்கு வாய்க்காலில் மழை நீர் மற்றும் கழிவு நீர்கள் செல்ல தடையாக இருந்தது.
இதனை அப்பகுதி பொதுமக்கள் தொகுதி எம்.எல்.ஏ.அனிபால் கென்னடியிடம் முறையிட்டனர்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வீட்டில் உள்ளவர்களிடம் இது குறித்து விசாரித்தார். அந்த வாய்க்காலில் கேபிள் செல்வதினால் அதனை சிமெண்ட் வைத்து மூடி உள்ளேன் என்று வீட்டின் உரிமையாளர் தெரிவித்தனர்.
உடனே சிமெண்ட் வைத்து மூடிய வாய்க்காலை உடைக்கும் படி அறிவுறுத்தினார். எம்.எல்.ஏ.வின் வேண்டுதலை ஏற்று உடனே மூடிய வாய்க்காலை சீர் செய்து கொடுத்தனர்.
பின்னர் மின் துறையிடம் செல்போனில் பேசி வாய்க்கால் சீராக ஓடும் அளவிற்கு கேபிளை கீழே புதைக்கும் படி அறிவுறுத்தினார்.
மின் துறையினரும் அவ்வாறு செய்து கொடுப்பதாக உறுதியளித்தனர்.
இதில் தொகுதி செயலாளர் சக்திவேல், அவைதலைவர் ரவி, மாநில இளைஞர் அணி ராஜி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






