என் மலர்
புதுச்சேரி

அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் மற்றும் நாட்டு நல பணி திட்ட தன்னார்வ தொண்டர்கள் தூய்மை விழிப்புணர்வு பேரணி நடத்திய காட்சி.
அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் தூய்மை விழிப்புணர்வு பேரணி
- 160 நாட்டு நல பணி திட்ட தன்னார்வ தொண்டர்கள் இணைந்து தூய்மை விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
- மாணவர்களை பள்ளியின் தாளாளர் மற்றும் முதுநிலை முதல்வருமான லூர்துசாமி பாராட்டினார்.
புதுச்சேரி:
அமலோற்பவம் லூர்து அகாடமி பள்ளியில் தூய்மை இருவார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனையொட்டி பொதுமக்களுக்கு தூய்மை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த பள்ளியின் 9,10 மற்றும் 11 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 160 நாட்டு நல பணி திட்ட தன்னார்வ தொண்டர்கள் இணைந்து தூய்மை விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
இப்பேரணி கொம்பாக்கம் திருவள்ளுவர் நகர், அரவிந்தர் வீதி, ஒட்டம்பாளயைம் சாலை, வில்லியனூர் முதன்மைச் சாலை வழியாக பள்ளியைச் சென்றடைந்தது அப்பகுதியில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளிக்குச் சென்று அங்கு பயிலும் மாணவ-மாணவர்களுக்கு தூய்மை மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பிளாஸ்டிக் தவிர்த்தல், மழைநீர் சேகரிப்பு , சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தல் ஆகியவை தொடர்பான முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தூய்மை விழிப்புணர்வுப் பேரணியை மேற்கொண்ட மாணவர்களை பள்ளியின் தாளாளர் மற்றும் முதுநிலை முதல்வருமான லூர்துசாமி பாராட்டினார்.