search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    முதலாம் ஆண்டு பட்டப்படிப்புகான வகுப்பு தொடக்க விழா
    X

    கிருஷ்ணசாமி பெண்கள் கல்வியல் கல்லூரி முதலாம் ஆண்டு தொடக்க விழாவில் கல்லூரி தாளாளர் டாக்டர் ராஜேந்திரன் பேசிய போது எடுத்த படம்.

    முதலாம் ஆண்டு பட்டப்படிப்புகான வகுப்பு தொடக்க விழா

    • கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ராஜேந்திரன் தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
    • கல்லூரி பேராசிரியர்கள் மாணவிகள் மற்றும் முதலாம் ஆண்டு மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    பாகூர் அருகே மணப்பட்டு கிராமத்தில் உள்ள கிருஷ்ணசாமி மகளிர் கல்வியியல் கல்லூரியில் பி.எட். மற்றும் பி.எஸ்.சி., பி.எட். பட்டப்படிப்புக்கான பட்டப்படிப்புக்கு முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா நடந்தது.

    விழாவுக்கு கிருஷ்ண கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ராஜேந்திரன் தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    கிருஷ்ணசாமி கல்வி நிறுவனங்களின் செயலாளர் வக்கீல் விஜயகுமார் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக கிருஷ்ணசாமி என்ஜினீயரிங் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியின் முதல்வர் டாக்டர் இளங்கோ கலந்து கொண்டு மாணவிகள் வாழ்வின் உன்னத லட்சியங்களை அடைவதற்கான அனைத்து பண்புகளையும் வளர்த்து க்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினார். கல்லூரி இயக்குனர் டாக்டர் முத்து மாணிக்கம் பி.எட். மற்றும் பி.எஸ்.சி., பி.எட். பட்டப்படிப்புகளின் இன்றைய தேவை மற்றும் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார்.

    கல்லூரியின் முதல்வர் ஜி.மஞ்சுளா அறிமுக உரையும் துணை முதல்வர் எம்.மஞ்சுளா வரவேற்புரையும் ஆற்றினர். முடிவில் உதவி பேராசிரியர் சீனிதீனதயாளன் நன்றி கூறினார். விழாவில் கல்லூரி பேராசிரியர்கள் மாணவிகள் மற்றும் முதலாம் ஆண்டு மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×