search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சின்ன வீராம்பட்டினம் - ஓட வெளியில் மரக்கன்றுகள் நடும் விழா
    X

    சின்ன வீராம்பட்டினம் - ஓட வெளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்ற காட்சி.

    சின்ன வீராம்பட்டினம் - ஓட வெளியில் மரக்கன்றுகள் நடும் விழா

    • முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளி சார்பில் நடைபெற்றது.
    • நாட்டு நல பணி திட்டத்தின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

    புதுச்சேரி:

    கவுண்டன்பாளையம் முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்று பிரதமர் மோடியின் என் மனம் என் நாடு திட்டத்தின் மூலம் 50-நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களும் சின்ன வீராம்பட்டினம் ஓட வெளி கிராம பஞ்சாயத்தாரும் இணைந்து அப்பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்தனன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி யூனியன் பிரதேச சமூக நல சங்கம் தலைவர் காத்தவராயன் செயலாளர் மதிஒளி , சுதந்திர போராட்ட தியாகி அசோக்ராஜ் , உதவி பொறியாளர் ராஜ்குமார் , இளநிலை செயற்பொறியாளர் சிவஞானம், 100 நாள் வேலை திட்டப்பணி யாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினர். மேலும் நாட்டு நல பணி திட்டத்தின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில கோஜிரியோ கராத்தே சங்கத்தின் பொதுச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் மாணவர்களை வாழ்த்தி பேசினார்.

    பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் பள்ளி துணை முதல்வர் வினோலியா டேனியல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

    இந்நிகழ்ச்சியில் அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெயந்தி செய்திருந்தார்.

    Next Story
    ×