என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி ஏனாம் பயணம்
- புதுவை மாநிலம் ஏனாம் பிராந்தியம் ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றங்கரையோரம் உள்ளது. ஏனாம் பிராந்தியத்தில் மக்கள் நல திட்டங்கள், வளர்ச்சி பணிகள் புறக்கணிக்கப்படுவதாக அந்த தொகுதியின் சுயேட்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் கடந்த 1½ ஆண்டுகளாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
- இதனிடையே முதல்-அமைச்சரை தான் தவறாக விமர்சிகக்வில்லை என்றும், தன்னுடைய பேச்சு தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாக கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் விளக்கம் அளித்தார்.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் ஏனாம் பிராந்தியம் ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றங்கரையோரம் உள்ளது.
ஏனாம் பிராந்தியத்தில் மக்கள் நல திட்டங்கள், வளர்ச்சி பணிகள் புறக்கணிக்கப்படுவதாக அந்த தொகுதியின் சுயேட்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் கடந்த 1½ ஆண்டுகளாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். அதோடு, ஏனாம் பிராந்தியத்தில் மக்கள் நல திட்டங்களை நிறைவேற்ற கோரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சட்டமன்ற வளாகத்தில் உண்ணாவிரத போரா ட்டத்தை நடத்தினார்,
அப்போது முதல்- அமைச்சர் ரங்கசாமியுடன் நடந்த பேச்சுவார்த்தையில், 15 கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. ஆயினும் கோரிக்கைகள் இதுநாள் வரை நிறைவேற்றி தரப்படவில்லை என கூறப்படுகிறது.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததை கண்டித்து நேற்று முன்தினம் முதல் ஏனாமில் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு நேற்று கடையடைப்பு போராட்டமும் நடைபெற்றது.
3-வது நாளாக இன்றும் ஏனாம் எம்.எல்.ஏ. வின் போராட்டம் தொடர்கிறது இதனிடையே, முதல்- அமைச்சர் ரங்கசாமியை ஏனாம் எம்.எல்.ஏ. அநாகரீகமாகவும், அவதூறாகவும பேசியதாக தகவல் வெளியானது இதனையடுத்து என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முதல்-அமைச்சரின் ஆதரவாளர்கள் புதுவையில் மறியல், உருவபடம் எரிப்பு உள்ளிட்ட போராட்டம் நடத்தினர்.
இதனிடையே முதல்-அமைச்சரை தான் தவறாக விமர்சிகக்வில்லை என்றும், தன்னுடைய பேச்சு தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாக கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் விளக்கம் அளித்தார்.மக்கள் நல திட்டங்களை தடுக்கும் முன்னாள் அமைச்சர் மல்லாடியைதான் விமர்சித்து பேசியதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையில், ஏனாமில், நேற்று முன்தினம் தொடங்கிய கலைவிழா இன்று நிறைவு பெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் ரங்கசாமி நேற்றிரவு ஏனாமிற்கு காரிலேயே புறப்பட்டார். அவருடன் அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.பி. ரமேஷ், லட்சுமிகாந்தன் உள்ளிட்டோரும் 10 வாகனங்களில் சென்றனர்.
இன்று மதியம் 12.45 மணிக்கு அவர்கள் விஜயவாடா சென்றடைந்தனர், முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அவர்களை வரவேற்றார். முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அங்குள்ள ஓட்டலில் ஓய்வு எடுத்தனர். அங்கிருந்து அவர்கள் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு ஏனாம் செல்ல உள்ளனர்.
இதனிடையே ஏனாமில் எம்.எல்.ஏ. போராட்டத்தினால் பதட்டம் நிலவுகிறது. ஆந்திர மாநில எல்லை முதல் ஏனாம் முழுவதும் வழிநெடுகிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கலைவிழா நடைபெறும் பாலயோகி மைதானத்தை சுற்றிலும் போலீஸ் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது, ரங்கசாமி செல்லும் பாதைகளிலு் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.இன்று மாலை 7 மணிக்கு நிறைவு விழா நடக்கிறது. அதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பங்கேற்று பேசுகிறார்.
விழாவை புறக்கணிப்பதாக ஸ்ரீநிவாஸ் அசோக் எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.






