என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்
- பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் நடக்கிறது.
- இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள புதுவை தொழில்துறை அழைப்பு விடுத்துள்ளது.
புதுச்சேரி
இந்திய அரசின் திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் துறை மூலம் தொழில் பழகுநர் பயிற்சியை ஊக்குவிக்கும் நோக்கில் பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் நடக்கிறது.
புதுவை அரசின் தொழிலாளர் துறை, துணை தொழில் பழகுநர் ஆலோசகர் அலுவலகம் சார்பில் நாளை வெள்ளிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை அரசு ஆண்கள் தொழில்பயிற்சி மையத்தில் முகாம் நடக்கிறது. இதில் மத்திய, மாநில நிறுவனங்கள், தனியார், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் ஒரே இடத்தில் பங்கேற்கின்றன. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள புதுவை தொழில்துறை அழைப்பு விடுத்துள்ளது.
Next Story






