என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
மத்திய அரசிடம் கையேந்தாத நிலைக்கு புதுவையை கொண்டுசெல்ல வேண்டும்- எதிர்கட்சித்தலைவர் சிவா
- பட்ஜெட் உரையில் வணிக வளர்ச்சிக்காக எந்த திட்டமும் இல்லை.
- அபரீதமான தொகையை வரியாக பெறும் மத்திய அரசு சொற்பமான பங்கை மட்டுமே புதுவைக்கு கொடுக்கிறது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்கட்சி தலைவர் சிவா பேசியதாவது:-
பட்ஜெட் உரையில் வணிக வளர்ச்சிக்காக எந்த திட்டமும் இல்லை. வணிகத்தை நம்பி இருந்தோர் எல்லாம் நலிந்த நிலைக்கு தள்ளப்ப ட்டுள்ளனர். மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கி உள்ளது. பால் பொருட்கள், அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் புதுவையின் வணிக வளர்ச்சி மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
அபரீதமான தொகையை வரியாக பெறும் மத்திய அரசு சொற்பமான பங்கை மட்டுமே புதுவைக்கு கொடுக்கிறது. புதுவை தனது வருமானத்தை தொடர்ந்து இழந்து வருகிறது. எனவே வணிக நிலவரம் குறித்து அரசு ஆய்வு செய்ய வேண்டும். ரேஷன் கடைகள் திறந்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும். துறைமுகத்தை செயல்படுத்தினால் ஆண்டுக்கு ரூ.300, ரூ.400 கோடி வருமானம் கிடைக்கும்.
ஸ்பின்கோ மில்லையாவது தொடர்ந்து இயக்க வேண்டும். மத்திய அரசிடம் கையேந்தாமல் சொந்த காலில் நிற்க, வல்லுனர் குழுவை அமைத்து வருவாயை பெருக்க வழிகாண வேண்டும். புதுவையை வாழ வைக்க, பொருளாதாரத்தை பெரிய அளவில் உயர்த்த, சுற்றுலா, தொழில்துறை, வியாபாரத்தில் என்னென்ன செய்யலாம் என்பதில் கருத்தை அறிய குழு அமைக்க வேண்டும்.
தன்னிறைவு பெற்று, மத்திய அரசில் கையேந்தாத நிலைக்கு புதுவையை கொண்டு சென்றால்தான் நல்ல பட்ஜெட்டை போட முடியும்.
இவ்வாறு, அவர் பேசினார்.






