என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு-மருத்துவ பரிசோதனை முகாம்
    X

    மருத்துவ பரிசோதனை முகாமை அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் தொடங்கி வைத்து பேசிய காட்சி.

    மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு-மருத்துவ பரிசோதனை முகாம்

    • அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் தொடங்கி வைத்தார்
    • இலவச மார்பக புற்றுநோய் மற்றும் விழிப்புணர்வு பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    முத்திரையர்பாளையம் இளங்கோ அடிகள் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் புவுண்டர் ஆப் பாண்டி பேரண்டிங் ஹப் புதுவை ரிவேஜ் லேடிஸ் சர்கில் சார்பில் இலவச மார்பக புற்றுநோய் மற்றும் விழிப்புணர்வு பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    முகாமை அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம் தொடங்கி வைத்தார். பள்ளியின் முதல்வர் கோகிலாம்பாள் முன்னிலை வகித்தார். பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கண்டறிவதற்கான முதல்நிலை பரிசோதனை களை செய்தனர். மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது குறித்தும், சிகிச்சை முறைகள் குறித்தும் டாக்டர் ஜெயந்தி குருமூர்த்தி விளக்கி கூறினார்.

    Next Story
    ×