search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரூ.4.7 கோடி மதிப்பில் குடிநீர் தொட்டி அமைக்க  பூமி பூஜை
    X

    பூமி பூஜையை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். அருகில் அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய்.ஜெ.சரவணன்குமார் உள்ளனர்.

    ரூ.4.7 கோடி மதிப்பில் குடிநீர் தொட்டி அமைக்க பூமி பூஜை

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
    • குடிநீர் தேக்க தொட்டி மற்றும் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை குடிநீர் தேக்க தொட்டி கட்டப்பட உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை ஊசுடு தொகுதிக் குட்பட்ட கோனேரிக்குப்பம், உளவாய்க்கால் மற்றும் அகரம் பகுதியில் பல ஆண்டுகளாக குடிநீர் பிரச்சனை இருந்து வருகிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ.வும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சருமான சாய்.ஜெ.சரவணன்குமார் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் வலியுறுத்தி மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் நிதி உதவியுடன் ரூ. 4. 7 கோடி மதிப்பில் அதற்கான பூமி பூஜை கோனேரிகுப்பத்தில் நடந்தது.

    அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் முன்னிலை யில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து வைத்து குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டி கட்டுமான பணியை பெயர் பலகையை திறந்து வைத்து தொடங்கி வைத்தனர்.

    இந்தத் திட்டத்தின் கீழ் 2.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி மற்றும் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை குடிநீர் தேக்க தொட்டி கட்டப்பட உள்ளது.

    இதனுடன் நீர் உந்து மோட்டார் பொருத்தப்பட்டு மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு நீர் இறவை செய்யும் வகையில் செய்யப்பட்டு உள்ளது. மேலும் குடிநீரில் இரும்பு தாதுக்களை நீக்கும் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து புதிய குடிநீர் விநியோக குழாய் பதிக்கும் பணிகளும் நடக்க உள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட குடிநீர் திட்டம் மூலம் உளவாய்க்கால், கோனேரிக்குப்பம், அகரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெறு வார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

    நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயலர் மணிகண்டன், ஜல்ஜீவன் திட்ட இயக்குனர் வல்லவன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரச்செல்வம், உள்ளாட்சித் துறை இயக்குனர் சக்திவேல், கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், பொது சுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் உமாபதி, கிராம குடிநீர் உட்கோட்ட உதவி பொறியாளர் பீனா ராணி, இளநிலை பொறியாளர் சுதர்சனம், வில்லியனூர் கொம்யூன் ஆணையர் எழில்ராஜன், உதவி பொறியாளர் திருநாவுக்கரசு, ஜல்ஜீவன் திட்ட ஒருங்கிணைப் பாளர் பால முருகன், இள நிலைய பொறியாளர் கருத்தையன், பா.ஜனதா தொகுதி தலைவர் தியாகராஜன், கோனேரிகுப்பம் தாமோதரன், அகரம் கணேசன், ஆனந்தபாஸ்கர், உளவாய்க்கால் கலையரசன், முத்தையன், முருகவேல் மற்றும் தொகுதி குடிநீர் பொறுப்பாளர் பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×