என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அங்கன்வாடி ஊழியர்களுக்கு பென்சன்-அன்பழகன் வலியுறுத்தல்
    X

    கோப்பு படம்.

    அங்கன்வாடி ஊழியர்களுக்கு பென்சன்-அன்பழகன் வலியுறுத்தல்

    • புதுவை அமைச்சரவைக்கு முழு அதிகாரம் உருவாக்க அலுவலக விதியில் திருத்தம் கொண்டு வந்து அதை மத்திய அரசுக்கு அனுப்பி சட்ட திருத்தம் கொண்டு வர வழிவகை காண வேண்டும்.
    • மருத்துவம் சார்ந்த உயர்கல்வியில் அரசின் இடஒதுக்கீட்டில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க அரசு சட்டமன்ற கூட்டத்தொடரில் உரிய சட்டம் கொண்டு, வர வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து கடிதம் அளித்தார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அமைச்சரவைக்கு முழு அதிகாரம் உருவாக்க அலுவலக விதியில் திருத்தம் கொண்டு வந்து அதை மத்திய அரசுக்கு அனுப்பி சட்ட திருத்தம் கொண்டு வர வழிவகை காண வேண்டும். அரசின் துறைகளை சீர்செய்ய ஒர்க் ஸ்டடி குரூப் ஒன்று அமைக்க வேண்டும்.

    ஒப்பந்த ஊழியர்களுக்கு அரசு நியாயமான சம்பளத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். சமையல் கியாஸ் சிலிண்டருக்கும் ரூ.500 மானிய உதவியாக அரசு வழங்க வேண்டும். தனியார் மற்றும் கோவில் இடங்களில் வசிப்போருக்கு அவரவர் கூரை வீடுகளை கல்வீடாக மாற்றிக் கொள்ள ரூ.5 லட்சம் மானியம் வழங்க வேண்டும்.

    நகரப் பகுதி முழுவதும் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வழி காண வேண்டும். அரசு துறைகளில் பணிபுரியும் பகுதி நேர ஊழியர்கள், மணி நேர ஊழியர்கள், தினக்கூலி ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரையும் நிதி நிலைமைக்கு ஏற்ப பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

    மருத்துவம் சார்ந்த உயர்கல்வியில் அரசின் இடஒதுக்கீட்டில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க அரசு சட்டமன்ற கூட்டத்தொடரில் உரிய சட்டம் கொண்டு, வர வேண்டும். தனி கல்வி வாரியம், விளையாட்டுத் துறைக்கு தனி இயக்குனரகம், அமைக்க வேண்டும்.

    அரசுத் துறைகளில் கடன் பாக்கி வைத்துள்ளோருக்கு வட்டி மற்றும் அபராத வட்டியை தள்ளுபடி செய்து அசலை செலுத்த வாய்ப்பு அளித்தால் கடன் வசூலாகும். மதுபானம் கொள்முதல், விநியோகம் ஆகிய இரண்டையும் அரசே ஏற்று நடத்த தனி கார்பரேஷனை ஏற்படுத்த வேண்டும்.

    ரோடியர் மில் வளாகத்தில் தனியார் பங்களிப்புடன் சர்வ தேச ஐ.டி. பூங்கா, சேதராப்பட்டில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் தொழில் பூங்கா அமைத்தால் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். ஓய்வு பெறும் நிரந்தர அங்கன்வாடி ஊழியாகளுக்கு அரசு துறைகளில வழங்கப்படும் பென்ஷன், மற்றும் ஓய்வூதிய தொகை வழங்க வேண்டும்.

    புதுவை, உழவர்கரை நகராட்சிகளை இணைத்து மாநகராட்சியாகவும், அரியாங்குப்பம், வில்லியனூர், மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம், பாகூர் ஆகிய கொம்யூன் பஞ்சாயத்துக்களை மக்கள் ஜனத்தொகைக்கு ஏற்ப நகராட்சிகளாக மாற்றம் வேண்டும்.

    அரசுத் துறையில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதால் ஓ.பி.சி., எஸ்.சி., பொதுபிரிவினருக்கு 5 ஆண்டு வயது தளர்வு வழங்கி அரசாணை வெளியிட வேண்டும். ஏழை பள்ளி மாணவர்கள் கல்வி பயிலும் அரசு பள்ளிகளில் மீண்டும் காலை சிற்றுண்டி திட்டத்தை அரசு கொண்டுவர வேண்டும்.

    இவ்வாறு அன்பழகன் கடிதத்தில் கூறியுள்ளார்.

    Next Story
    ×