என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மாணவர்களுக்கு கையெழுத்து போட்டி
    X

    முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கையெழுத்து போட்டி நடந்த காட்சி.

    மாணவர்களுக்கு கையெழுத்து போட்டி

    • போட்டியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
    • மாணவர்களுக்கு ஓவியப்போட்டி , வண்ணம் தீட்டுதல் பேச்சுப்போட்டி, கையெழுத்துப் போட்டி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாளையொட்டி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி , வண்ணம் தீட்டுதல் பேச்சுப்போட்டி, கையெழுத்துப் போட்டி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தி னராக புதுச்சேரி மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் வாழ்த்துரை வழங்கினார்.

    பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், பள்ளியின் துணை முதல்வர் வினோலியா டேனியல் முன்னிலை வகித்தனர். போட்டியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமை களை வெளிப்படுத்தினர்.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சி காமராஜர் பிறந்த நாள் விழாவன்று பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.

    நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×