search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விலைவாசிக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்
    X

    கோப்பு படம்.

    விலைவாசிக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்

    • தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்
    • போக்கு வரத்து துறையின் திடீர் கட்டண நடை முறைக்கு ஆட்டோ தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் அரசு பஸ்களை விட தனியார் பஸ்களே பொது போக்குவரத்துக்கு அதிகம் புழக்கத்தில் உள்ளது.

    வெளிமாநிலத்திலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் ஆட்டோக்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் ஆட்டோக்களில் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    இதனால் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆட்டோக்களை பயன்படுத்துவதையே தவிர்த்து வருகின்றனர். கட்டணத்தை முறைப்படுத்த மீட்டர் பொருத்தினால் மட்டுமே எப்.சி. சான்றிதழ் அளிக்கப்படுகிறது.

    புதுவையில் ஒடும் பெரும்பாலான ஆட்டோக்களிலும் மீட்டர் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால் மீட்டரை இயக்குவதில்லை. ஆட்டோக்களுக்கு கட்டணமும் 2016-ல் நிர்ணயித்திருந்தனர். கடந்த 8 ஆண்டாக இந்த கட்டணம் நடைமுறைக்கு வரவில்லை.

    இந்த நிலையில் போக்குவரத்து துறைக்கு ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. இதையடுத்து போக்குவரத்து துறை, மீட்டர் கட்டணத்தை வசூலிக்காத, மீட்டர் பொருத்தாத ஆட்டோக்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.

    இந்த எச்சரிக்கை இன்றும் பெரும் பாலான ஆட்டோ க்களில் பின்பற்றப் பட வில்லை. வாடிக்கை யாளர்களிடம் பேசிய கட்டணம் வசூலித்தனர். போக்கு வரத்து துறையின் திடீர் கட்டண நடை முறைக்கு ஆட்டோ தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க செயலாளர் சீனுவாசன் கூறியதாவது:-

    ஆட்டோ கட்டணம் நிர்ணயித்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் பல முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதோடு ஆட்டோக்கள் வரி, உதிரிபாகங்கள் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

    தமிழகத்தில் கட்டணத்தை உயர்த்தும் போது ஆட்டோ தொழிற்சங்க ங்களை அழைத்து பேசி கட்டணம் நிர்ணயம் செய்கி ன்றனர். ஆனால் புதுவையில் திடீரென 8 ஆண்டுக்கு முன்பு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க உத்தரவு பிறப்பிக்கி ன்றனர்.

    அதற்கு பதிலாக ஆட்டோ தொழிற்சங்கங்களை அழைத்து பேசி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஏ.ஐ.டி.யூ.சி. மாநில ஆட்டோ தொழிலாளர் நலச்சங்கம் பொதுசெயலாளர் சேது செல்வம் கூறியதாவது:-

    7 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலைவாசி இப்பொழுது உள்ளதா? குறிப்பாக பெட்ரோல், இன்சூரன்ஸ், எப்.சி. கட்டணம், சாலை வரி, ஆட்டோ உதிரி பாகங்கள், பல மடங்கு உயர்ந்துள்ளது.

    அது மட்டுமின்றி அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஆட்டோ மீட்டர் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்.

    அண்டை மாநிலங்களில் அரசு ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்யும்போது ஆட்டோ தொழிற்சங்க த்தோடு கலந்து பேசி மீட்டர் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஜெகன்மோகன் ரெட்டி அரசு ஆண்டுதோறும் ஆட்டோ எப்.சி. எடுப்பதற்கு ரூ.10 ஆயிரம் மானியமாக வழங்குகிறது.

    பல்வேறு மாநிலங்களில் அங்குள்ள அரசுகள் கியாஸ் பயன்படுத்தி ஆட்டோ ஓட்டுவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். இந்த உண்மைகளை உணர்ந்து போக்குவரத்து துறை செயல்படுமானால்

    ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் ஆட்டோக்களில் மீட்டர் கட்டணம் வசூலிப்பதற்கு தயாராக இருக்கிறோம் என்பதை அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×