search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அதிகாரிகள் ஒத்துழைப்போடு போலி பத்திரங்கள் இணைப்பு
    X

    கோப்பு படம்.

    அதிகாரிகள் ஒத்துழைப்போடு போலி பத்திரங்கள் இணைப்பு

    • வீடியோ ஆதாரம் வெளியிட்டு நாராயணசாமி புகார்
    • நில அபகரிப்பு கூட்டம் அரசியல்வாதிகளின் துணையோடு இந்த செயல்களில் ஈடுபட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த ராகுல்காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.

    இந்த கணக்கெடுப்பு நடத்தினால் மேல்சாதி மக்களுக்கு செல்லும் சலுகைகள் தடுக்கப்படும்.

    புதுவையிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். சென்டாக்கில் தொடர்ந்து குளறுபடி நடக்கிறது. என்.ஆர்.ஐ. இட ஒதுக்கீட்டில் விதிமுறையை மாற்றி இடங்களை அபகரிக்க முயற்சிக்கின்ற னர். இதற்கு துறை செயலாளர் ஒத்துக் கொள்ளாததால் இந்த முடிவை கைவிட்டுள்ளனர்.

    பல் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்த மாணவர் சுரேந்தருக்கு 2-வது கட்ட கலந்தாய்வில் எம்.பி.பி.எஸ். சீட் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவருக்கு சீட் ஒதுக்கவில்லை என்பதால் புகார் தெரிவித்துள்ளார்.

    இதனால் கவுன்சிலிங் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதுவை அரசு உயர்த்திய மின் கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும்.

    புதுவையில் போலி பத்தி ரங்கள் தயாரிப்பது, நிலங்களை அபகரிப்பது, தனியார் சொத்துக்களை வேறு நபருக்கு பட்டா போடுவது, கோவில் நிலங்களை அபகரிப்பது, அரசு புறம்போக்கு நிலங்களுக்கு பத்திரப்பதிவு செய்வது என பத்திரப்பதி வுத்துறை தொடர் ஊழலில் ஈடுபட்டுள்ளது.

    சி.பி.ஐ. காரைக்காலில் சார்பதிவாளர் மீது வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டார். அவர் வாக்குமூலத்தில் யாருக்கு லஞ்சம் செல்கிறது என தெரிவித்துள்ளார்.

    புதுவை காமாட்சியம்மன் கோவில் நில வழக்கில் சார்பதிவாளர், பத்திரப்பதி வுத்துறை செயலாளர் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதுதொடர்பான வழக்கில் ஐகோர்ட்டு, நிலத்தை மீண்டும் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தர விட்டுள்ளது. இதை வலி யுறுத்தி இந்தியா கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

    புதுவையில பல போலி பத்திரங்கள் தயாரிக்கப்படு கிறது. 32 போலி பத்திரங்கள் தயாரிக்கப்பட்டு, ஏற்கனவே பதிந்துள்ள பத்திரங்களை எடுத்துவிட்டு, போலி பத்திரத்தை வைத்து ரூ.பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது.

    பதிவுத்துறையில் இன்டெக்ஸ் புத்தகம், கைரேகை புத்தகம் இருக்கும். இன்டெக்ஸ் புத்தகத்தில் பக்கத்தை எடுத்து விட்டு, போலி பத்திரம் செய்தவர்க ளின் பட்டியலை இணைக்கின்றனர். இதற்கு அதிகாரிகள், ஊழியர்கள் துணையாக உள்ளனர். 29 பத்திரம் உழவர்கரை, 3 பத்திரம் பாகூர் சார்பதி வாளர் அலுவலகத்தில் பதி யப்பட்டுள்ளது. பதிவுத்துறைக்கு தொடர்பி ல்லாதவர்கள் உள்ளே நுழைந்து அதிகாரிகள் ஒத்துழைப்போடு பத்தி ரங்களை மாற்றியுள்ளனர்.

    ஒரு மாதம் முன்பு இதை மாற்றியதற்கான ஆதாரங்கள் உள்ளது. இதுகுறித்து சப்-கலெக்டர் விசாரணை நடத்தியுள்ளார். இதில் அரசியல்வாதிகளின் பின்னணி உள்ளது. ஒரு பத்திரத்துக்கு ஒரு எண்தான் தருவார்கள். ஆனால் 2 பத்திரத்துக்கு ஒரே எண் அளிக்கப்பட்டுள்ளது. வில்லியனூரில் சார்பதி வாளர் கார்த்திகேயன் என்பவர் போலி பத்திரம் பதியமாட்டேன் என கூறியதால் அவரை ஒரு கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்துள்ளார்.

    தற்போது திருக்கனூர் சார்பதிவாளர் பாஸ்கர், வில்லியனூருக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டு பத்திரம் பதியப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்தமாக பத்திரப்பதிவு ஊழலுக்கு என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சிதான் காரணம். பொதுமக்களின் பத்திரத்திற்கு உத்திரவாதம் இல்லாத நிலை உள்ளது. யார் சொத்தை வேண்டு மானாலும், யாருக்கு வேண்டுமானாலும் எழுதி கொடுக்கும் நிலை உள்ளது.

    பத்திரப்பதிவுத்துறையில் இமாலய ஊழல் நடக்கிறது. நில அபகரிப்பு கூட்டம் அரசியல்வாதிகளின் துணையோடு இந்த செயல்களில் ஈடுபட்டுள்ளது. இந்த பத்திரப்பதிவுக்கு முதல்-அமைச்சரும் உடந்தையாக உள்ளார். புதுவையில் உள்ள மக்களின் சொத்துக்களுக்கு பாதுகாப்பு இல்லாத என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. போலி உயில், பத்திரம் தொடர்பாக சி.பி.ஐ. விசா ரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் ஒரு வீடியோ ஆதாரம் ஒன்றையும் வெளியிட்டார். அதில் ஒருவர் தரையில் அமர்ந்து இன்டெக்ஸ் புத்தகத்தில் ஆவணங்களை மாற்றுவதுபோல காட்சி பதிவாயிருந்தது.

    Next Story
    ×