என் மலர்
புதுச்சேரி

விழாவில் காமராஜரின் பேத்தி கமலிகா காமராஜிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்ட காட்சி.
முத்தமிழ் கலைச்சங்கமம் சார்பில் சமூக சேவகர்களுக்கு பாராட்டு விழா
- இலவசமாக வழங்கி மக்கள் சேவை செய்து வரும் இளங்கோ லட்சுமி ஆகியோரை பாராட்டி நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.
- சங்கத் தலைவர் கே.கே. சாமி என்ற கருப்புசாமி தொகுத்து வழங்கினார் முடிவில் முத்தமிழ் கலைச்சங்கமம் செயலாளர் கிஷோர் குமார் நன்றி கூறினார்.
புதுச்சேரி:
புதுச்சேரி முத்தமிழ் கலை சங்கமம் சார்பில் அதன் நிறுவனர் ஆனந்தராஜ் ஏற்பாட்டின் பேரில் வ.உ.சி. பிறந்த நாள் விழா புதுவை தமிழ்ச்சங்க த்தில் கொண்டா டப்பட்டது.
நிகழ்ச்சிக்கு புதுவை தமிழ்ச்சங்கத்தலைவர் முத்து தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் காமராஜரின் பேத்தி கமலிகா காமராஜர், மதுரையை சேர்ந்த டி.பி.ராஜேந்திரன், கண்டமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சேவியர் சந்திரகுமார் மற்றும் புதுச்சேரியில் வாரம் இருமுறை சுமார் 1000 பொதுமக்களுக்கு சத்துமாவு கஞ்சி வழங்கியும், சுமார் 2 டன் மதிப்புள்ள காய்கறிகளை இலவசமாக வழங்கி மக்கள் சேவை செய்து வரும் இளங்கோ லட்சுமி ஆகியோரை பாராட்டி நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு காமராஜரின் பேத்தி கமலிகா காமராஜர் பரிசு வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் எதிர்க்கட்சித் தலைவர் சிவா மற்றும் புதுவை தமிழ்ச் சங்க துணைத் தலைவர் ஆதிகேசவன், செயலாளர் சீனு. மோகன்தாஸ் மற்றும் தமிழ்ச் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சியை புதுச்சேரி ரயில் பயணிகள் சங்கத் தலைவர் கே.கே. சாமி என்ற கருப்புசாமி தொகுத்து வழங்கினார் முடிவில் முத்தமிழ் கலைச்சங்கமம் செயலாளர் கிஷோர் குமார் நன்றி கூறினார்.






