என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அங்கன்வாடி- பாண்லே மூலம் தேசியக்கொடி விற்பனை -  ரங்கசாமி தகவல்
    X

    வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்றும் திட்டத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்த காட்சி. அருகில் சபநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன் உள்ளனர்.

    அங்கன்வாடி- பாண்லே மூலம் தேசியக்கொடி விற்பனை - ரங்கசாமி தகவல்

    • சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.
    • சுதந்திர தின நாளில் நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் கொடியேற்ற மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

    புதுச்சேரி:

    நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு சார்பிலும் நாடு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. சுதந்திர தின நாளில் நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் கொடியேற்ற மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

    புதுவையில் ஆகஸ்ட் 13 முதல் 15-ந் தேதி வரை அரசு அலுவலகம், வீடுகளில் கொடியேற்றம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்கான துண்டுபிரசுரங்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் புதுவையில் ஆயிரத்து 80 இடங்களில் 62 வகையான நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. மேலும் வீடுதோறும் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி 13 முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது. இதற்காக தேசியக்கொடி அங்கன்வாடி, பாண்லே பாலகத்தில் விற்பனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு செயலர்கள் உதயகுமார், நெடுஞ்செழியன் ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×