என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மாற்றுதிறனாளிகள் விளையாட்டு போட்டி
    X

    விளையாட்டு போட்டியை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.

    மாற்றுதிறனாளிகள் விளையாட்டு போட்டி

    • அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்
    • 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் போட்டிகளில் கலந்து கொண்டு திறமைகளை வெளிப் படுத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் சமூக நலத்துறையின் மூலம் ஆண்டுதோறும் மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கான விளையாட்டு போட்டி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று நடந்தது. போட்டியை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஜோதியை விளையாட்டு வீரர்களிடம் வழங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

    விழாவில் சமூக நலத்துறை செயலர் பங்கஜ் குமார் ஜா, இயக்குனர் குமரன், துணை இயக்குனர்கள் ஆறுமுகம், கனகராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

    போட்டியில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் போட்டிகளில் கலந்து கொண்டு திறமைகளை வெளிப் படுத்தி வருகின்றனர்.

    இதில் வெற்றி பெறும் வீரர்களுக்கு வருகிற 3-ந் தேதி பரிசுகள் வழங்கப்பட உள்ளன.போட்டிக்கான ஏற்பாடுகளை சமூக நலத்துறை அதிகாரிகள் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×