என் மலர்
புதுச்சேரி

தங்கம் வென்று சாதனை படைத்த மாணவனை ஆல்பா கல்வி குழுமங்களின் இயக்குனர் தனதியாகு பாராட்டிய போது எடுத்த படம்.
ஆல்பா பள்ளி மாணவர் தங்கம் வென்று சாதனை
- தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான தேக்வோண்டா போட்டியில் ஜூனியர் பிரிவில் 2-ம் இடத்தை பெற்று வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார்.
- அப்போது மாணவனின் பெற்றோர்களும் பயிற்சியாளரும் உடன் இருந்தனர்.
புதுச்சேரி:
ஆல்பா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் வெ. விஷால் ஷரன். இவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான தேக்வோண்டா போட்டியில் ஜூனியர் பிரிவில் பங்கேற்று தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
மேலும் தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான தேக்வோண்டா போட்டியில் ஜூனியர் பிரிவில் 2-ம் இடத்தை பெற்று வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார்.
இதுமட்டுமின்றி கொல்கத்தாவில் நடை பெற்ற தேசிய அளவிலான போட்டியில் ஜூனியர் பிரிவில் தங்க பதக்கம் பெற்று முதல் பரிசினை வென்றார்.
இதுபோன்று தொடர்ந்து சாதனை படைத்து வரும் மாணவனை ஆல்பா கல்வி குழுமங்களின் இயக்குநர் தனதியாகு பொன்னாடை போர்த்தி, இனிப்புகள் வழங்கி, பூங்கொத்து கொடுத்து பாராட்டினார். அப்போது மாணவனின் பெற்றோர்களும் பயிற்சி யாளரும் உடன் இருந்தனர்.






