என் மலர்
புதுச்சேரி

அதிகாரிகளுடன் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆலோசனை நடத்திய காட்சி.
வேளாண் - மலர், காய்கறி கண்காட்சி
- புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமையில் வேளாண், மலர், காய்கறி கண்காட்சி நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.
- இந்த கண்காட்சி மலர், காய்கறியின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறும் விதமாக அமைய வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமையில் வேளாண், மலர், காய்கறி கண்காட்சி நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.
கூட்டத்தில் நிதித்துறை செயலர் ராஜூ, விவசாயத்துறை செயலர் குமார், துறை இயக்குனர் பாலகாந்தி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பேசியதாவது:-
என்வீடு என் நலம் என்ற திட்டத்தை விரைந்து செயல்படுத்தும் விதமாகவும், இல்லத்தரசிகளை கவரும்விதமாகவும், விவசாயம், காய்கறி, கனி கண்காட்சிகள் நடத்தப்பட வேண்டும். இந்த கண்காட்சி மலர், காய்கறியின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறும் விதமாக அமைய வேண்டும்.
சூரிய ஒளி மின்சாரம் மூலம் வாட்டர் பம்பிங் சிஸ்டம் நிறுவுவது தொடர்பாக விவசாயிகள் புரிந்து கொள்ளும் வகையில் கண்காட்சியில் அரங்குககள் அமைக்கப்பட வேண்டும்.
புதிய விவசாய கருவிகள் அறிமுகப்படுத்த வேண்டும். கண்காட்சியை வேளாண்துறை, சுற்றுலாத்துறை இணைந்து நடத்தலாம் என்பது உட்பட பல்வேறு முக்கிய முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது.






