என் மலர்
புதுச்சேரி

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஊர்வலமாக வந்த காட்சி.
விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பேரணி- ஆர்ப்பாட்டம்
- 100 நாள் வேலையை முழுமையாக வழங்க வேண்டும்.
- ரூ.300 கோடி வேலை திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணி நடந்தது.
புதுச்சேரி:
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் புதுவை மாநிலக்குழு சார்பில் சட்டசபை நோக்கி பேரணி, ஆர்ப்பாட்டம் நடந்தது.
பழைய பஸ்நிலையம் அருகே தொடங்கிய பேரணிக்கு சங்கத்தின் புதுவை செயலாளர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார். அகில இந்திய துணைத்தலைவர் லாசர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
புதுவை மாநில தலைவர் வின்சென்ட், பொருளாளர் தட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தனர். மாநிலக்குழு உறுப்பினர்கள் அரிதாஸ், விநாயகம், இன்னரசு, செல்வராசு, சிவசங்கரி, அன்பழகன், பரிமளா, ரமேஷ், தர்மசிவம், வளர்மதி, பானு, உமாசாந்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
100 நாள் வேலையை முழுமையாக வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும்.
வீடற்ற தொழிலாளர்களுக்கு வீட்டுமனைப்பட்டா, வீடு கட்ட மானியம் வழங்க வேண்டும். பணியின்போது இறந்தால் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். ரூ.300 கோடி வேலை திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணி நடந்தது.
பேரணி அண்ணாசாலை, நேருவீதி வழியாக ஆம்பூர்சாலையை அடைந்தது. அங்கு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.






