என் மலர்
புதுச்சேரி

காலாப்பட்டு தொகுதி அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக்கூட்டம் நடந்த போது எடுத்த படம்.
அ.தி.மு.க. இளைஞர் பாசறை ஆலோசனைக்கூட்டம்
- ஆலோசனைக்கூட்டம் பாசறையின் மாநிலச்செய லாளர் தமிழ்வேந்தன் தலைமையில் நடந்தது.
- ஏம்பலம் தொகுதி செயலாளர் சம்பத் உள்பட 50-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் ஆணைப்படி காலாப்பட்டு தொகுதியில் அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக்கூட்டம் பாசறையின் மாநிலச்செய லாளர் தமிழ்வேந்தன் தலைமையில் நடந்தது.
தொகுதி செயலாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி காலாப்பட்டு தொகுதியில் பூத் கமிட்டி அமைப்பது, தொகுதி நிர்வாகிகளை தேர்வு செய்வது குறித்து முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் மகளிர் அணி சார்பில் விமலா ஸ்ரீ, மாநில மாணவர் அணி செயலாளர் பிரதீப், மாநில தகவல் தொழில் நுட்ப செயலாளர் தினேஷ், ஏம்பலம் தொகுதி செயலாளர் சம்பத் உள்பட 50-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story






