என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் கல்வி வல்லுநர்கள் தினம்
    X

    பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் சார்ந்த துணை படிப்புகளுக்கான தகவல் கையேட்டை பிம்ஸ் மருத்துவமனை முதல்வர் அனில் பூர்த்தி வெளியிடப்பட்ட காட்சி. 

    பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் கல்வி வல்லுநர்கள் தினம்

    • உலக மருத்துவம் சார்ந்த கல்வி வல்லுநர் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
    • பிம்ஸ் மருத்துவமனையில் புதிதாக தொடங்கப்படவுள்ள மருத்துவம் சார்ந்த படிப்பு குறித்த தகவல் கையேடு வெளியிடப்பட்டது.

    புதுச்சேரி:

    உலக மருத்துவம் சார்ந்த கல்வி வல்லுநர் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் சிறப்பாக இந்நிகழ்வு கொண்டாடப்பட்டது. பிம்ஸ் மருத்துவம் சார்ந்த கல்வி(அலைய்டு ஹெல்த் சயின்ஸ்) கல்லூரி டீன் டாக்டர் அலீஸ் கிஷ்கு வரவேற்றார்.

    பிம்ஸ் மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் அனில் பூர்த்தி தலைமை தாங்கினார். மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவம் சார் கல்லூரி முதல்வர் டாக்டர் தீபா பிலிப் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    பின்னர் பிம்ஸ் மருத்துவமனையில் புதிதாக தொடங்கப்படவுள்ள மருத்துவம் சார்ந்த படிப்பு குறித்த தகவல் கையேடு வெளியிடப்பட்டது.

    பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.. பின்னர் நடந்த, செவிலியர் கல்லூரி மாணவியரின் நடனம் அனைவரையும் கவர்ந்தது. நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி துணை முதல்வர் டாக்டர் ஸ்டாலின், செவிலியர் கல்லூரி முதல்வர் மோனி, பிம்ஸ் பிஸிதெரபி கல்லூரி முதல்வர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். ‌முடிவில் மருத்துவ சார்ந்த கல்வி தொடர்பான பள்ளி முதல்வர் ஸ்வேதா நன்றி கூறினார்.

    Next Story
    ×