என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வீட்டின் இரும்பு கேட்டில் பதுங்கிய பாம்பு
    X

    இரும்பு கேட்டில் பதுங்கிய பாம்பை வனத்துறையினர் பிடித்த காட்சி.

    வீட்டின் இரும்பு கேட்டில் பதுங்கிய பாம்பு

    • வனத்துறையினர் பிடித்தனர்
    • ஒரு அடி நீளத்தில் மெல்லிய பாம்பு இருந்தது. உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை அவ்வை நகரில் ஒரு வீட்டின் வெளிபுற இரும்பு கிரில் கதவில் வித்தியாசமாக ஏதோ தென்பட்டது.

    உற்று நோக்கியதில் ஒரு அடி நீளத்தில் மெல்லிய பாம்பு இருந்தது. உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஊழியர் கண்ணதாசன் விரைந்து வந்து பாம்பை பிடித்தார். "வெள்ளிகோல் வரையன்" என்ற இந்த பாம்பு விஷத்தன்மை கொண்டதல்ல. கரப்பான் பூச்சி, பல்லிகளை மட்டும் உண்ண கூடியது.மழை காலத்தில் அதிகம் தென்படும்.

    அந்த வகையில் காலை முதல் லாஸ்பேட்டை பகுதியில் தொடர் மழை பெய்ததால் வெளியே வந்த பாம்பு பல்லியை பிடிக்க காத்திருந்த போது வனத்துறை ஊழியரிடம் சிக்கியுள்ளது.

    இதனை காட்டுப்பகுதியில் விட அவர் எடுத்து சென்றார்.

    Next Story
    ×