என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
தொழில் தொடங்க கடன் தருவதாக பல லட்சம் மோசடி
- கும்பலுக்கு வலைவீச்சு
- அதிர்ச்சியடைந்த கணேஷ் பணம் மோசடி செய்யப்பட்டது குறித்து லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை முத்தி யால்பேட்டை முத்தைய முதலியார்பேட்டை பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் கணேஷ் (வயது 44).
சுய தொழில் செய்து வருகிறார். இவரிடம் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவன ஊழியர்களான தேவசீலன், ஈஸ்வர் ஆகியோர் தொடர்பு கொண்டு தொழிலை விரிவாக்க எந்த ஆவணமும் இன்றி கடன் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனனர். இதனை நம்பிய கணேசும் அவர்களிடம் ரூ.40 லட்சம் கடன் கேட்டுள்ளார்.
உடனே அவர்கள் கடன் தருவதாக கூறி, கடனுக்கான இன்சூரன்ஸ் மற்றும் சில காரணங்களுக்காக ரூ.2 லட்சம் முன்பணமாக செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். அவர்கள் கேட்டதுபோல 2 தவணைகளாக அவர் ரூ.2 லட்சத்தை செலுத்தியுள்ளார். 1 வாரத்தில் ரூ.40 லட்சம் கிடைத்துவிடும் என அவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் பல நாட்கள் ஆகியும் பணம் வரவில்லை. இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது பல்வேறு காரணங்களை கூறி வந்துள்ளனர். இந்த நிலையில், அந்த நிறுவனம் மூடப்பட்டதாக கூறப்ப டுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த கணேஷ் பணம் மோசடி செய்யப்பட்டது குறித்து லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதேபோல் பலரிடமும் அந்த நிறுவனத்தின் மற்ற ஊழியர்கள் பேசி, பணத்தை ஏமாற்றியதாக தெரிகிறது. இதுகுறித்து சப்- இன்ஸ்பெக்டர் பாட்சா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து தேவசீலன், ஈஸ்வர் மற்றும் சிலரை தேடிவருகின்றனர்.






