search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரசாயண தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்
    X

    கோப்பு படம்.

    ரசாயண தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்

    • அன்பழகன் வலியுறுத்தல்
    • மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படக்கூடிய பணிகளை தொழிலாளர்கள் உயிரிழந்தால் ரூ 1 கோடி நிவார ணம் வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காலாப்பட்டில் ரசாயன தொழிற்சாலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

    இப்போது ஏற்பட்ட பாய்லர் வெடி விபத்தில் 15-க்கும் மேற்பட்டவர்கள் தீக்காயம் அடைந்தனர். அதில் சுமார் 5 பேர் 50 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட தொழி லாளர்களையும் மூடி மறைத்து வருகின்றனர்.

    இதில் நெடுஞ்செழியன் என்ற தொழிலாளி 2 தினங்களுக்கு முன்பு நள்ளி ரவில் மரணம் அடைந்தார். இந்த மரணம் இன்று தான் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. இந்த மரணத்தை கூட யார் அறி வித்தார் என்று தெரிய வில்லை.

    கடந்த 3 மாதத்திற்கு முன்பு கூட சுப்ரீம் கோர்ட்டில் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. பாதாள சாக்கடை அள்ளும் தொழில் செய்பவர்கள், மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படக்கூடிய பணிகளை தொழிலாளர்கள் உயிரிழந்தால் ரூ 1 கோடி நிவார ணம் வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

    எனவே அதன் அடிப்படையில் அந்த இழப்பீட்டுத் தொகையாக புதுவையை சேர்ந்த அந்த நிறுவனம் உயிரிழந்த ஊழியரின் குடும்பத்திற்கு வழங்க வேண்டும்.

    காயமடைந்தவர்களுக்கு 50 லட்சம் நிவாரணமாக கொடுக்கலாம். அரசு மூடி மறைக்காமல் சட்டத்திற்கு உட்பட்டு நிறுவனத்துடன் பேசி உரிய நிவாரணத் தொகையை வாங்கி கொடுக்க வேண்டும்.

    மாவட்ட கலெக்டர் இதில் வெறும் பார்வையாளராக மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகப்படியான இழப்பீட்டு தொகையை பெற்று தர வேண்டும்.

    காலாப்பட்டு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட காவல் ஆய்வாளரிடம் தொழிற்சாலை தீ விபத்து குறித்து புகார் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிமிடம் வரை சம்மந்தப்பட்ட விபத்துக்கு காரணமான தொழிற்சாலை நிர்வாகத்தில் ஒருவர் மீது கூட எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை. அந்த நிறுவனம் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அன்பழகன் கூறினார்.

    Next Story
    ×