என் மலர்
புதுச்சேரி

இரும்பு பொருட்களை திருடியவர்களையும் அவர்களை கைது செய்த போலீசாரையும் படத்தில் காணலாம்.
இரும்பு பொருட்களை திருடிய 4 பேர் கைது
- விழுப்புரம் -புதுவை 4 வழி சாலை பணி தற்போது நடைபெற்று வருகிறது.
- இதில் வெளிமாநிலத்தவர் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
புதுச்சேரி:
விழுப்புரம் -புதுவை 4 வழி சாலை பணி தற்போது நடைபெற்று வருகிறது.இதில் வெளிமாநிலத்தவர் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருவண்டார்கோவில் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் இரும்பு பொருட்கள் அடிக்கடி திருடு போய் வந்தது. இதற்கிடையே மதகடிப்பட்டு அருகே உள்ள ஆண்டியார் பாளையம் மாரியம்மன் கோவில் பகுதியில் சேர்ந்த மதன்ராஜ் என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் திருவண்டார் கோவில் பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வரும் நடராஜனிடம் அடிக்கடி 3 வெளி மாநிலத்தவர் இரும்பு பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இந்நிலையில் நேற்றும் அவர்கள் இரும்பு பொருட்களை திருடி கடையில் விற்பனை செய்தனர். இதுகுறித்து மேற்பார்வையாளர் மதன்ராஜ் திருபுவனை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுமார் 400 கிலோ இரும்பு பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இரும்பு பொருட்களை திருடி விற்ற வடமாநிலத்தை சேர்ந்த முகமது இஸ்மாயில், முஹம்மது இஜமதுல்லா, முகமது சகன்யராஜ் மற்றும் பழைய இரும்பு கடை வியாபாரி நடராஜன் ஆகிய 4 பேரையும் கைது செய்து புதுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திருடப்பட்ட இரும்பு பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.2லட்சம் ஆகும்.






