என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
2 கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை
- இந்த கோவிலில் பூஜை முடிந்து நேற்று மாலை கோவிலை பூசாரி பூட்டி சென்றார்.
- உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
புதுச்சேரி:
தவளக்குப்பத்தை அடுத்த தானம் பாளையம் பகுதியில் பழமை வாய்ந்த புட்லாய் அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் பூஜை முடிந்து நேற்று மாலை கோவிலை பூசாரி பூட்டி சென்றார். இரவில் மர்ம நபர்கள் முகமூடி அணிந்து கொண்டு கோவில் உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
மேலும் தவளக்குப்பம் சிக்னல் அருகில் உள்ள புத்து மாரியம்மன் கோவிலிலும் இதே போன்று உண்டியலை உடைத்து மர்ம கும்பல் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் தவளக்குப்பம் போலீசில் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் திரு முருகன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ள தடயங்களை வைத்து முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றார்.
குடியிருப்பு பகுதி மத்தியில் அடுத்தடுத்து 2 கோவிலில் உண்டியல் பணம் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






