என் மலர்
புதுச்சேரி

அங்கன்வாடி மையத்தை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் திறந்து வைத்த காட்சி.
புனரமைக்கப்பட்ட 2 அங்கன்வாடி மையங்கள்-அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் திறந்து வைத்தார்
- மனித நேய அறக்கட்டளை சார்பில் புனர மைக்கப்பட்டது இதன் திறப்பு விழா நடைபெற்றது.
- அங்கன்வாடி மையத்துக்கு தேவையான மற்றும் குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள், வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
மங்கலம் தொகுதியில் மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு கழகம் நிர்வாகத்தின் கீழ் உள்ள 2 அங்கன்வாடி மையத்தை மங்கலம் பகுதியில் உள்ள சூப்பர்பில் புரோடக்ட்ஸ் என்ற தனியார் நிறுவனத்தின் நிதி மூலம் வ. .உ. சி. முன்னாள் மாணவர்கள் மனித நேய அறக்கட்டளை சார்பில் புனர மைக்கப்பட்டது இதன் திறப்பு விழா நடைபெற்றது.
அங்கன்வாடி மையத்தை வேளாண்துறை அமைச்சர் தேனீ. ஜெயகுமார் திறந்து வைத்து அங்கன்வாடி பொறுப்பா ளர்களிடம் ஒப்படைத்தார். விழாவில் வ. உ.சி. அறக்கட்டளை தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மகளிர் மற்றும் குழந்தைகள் நலமேம்பாட்டு கழக இயக்குனர் முத்துமீனா மற்றும் , திட்ட அதிகாரி கருணாநிதி , வட்டார வளர்ச்சி அதிகாரி பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
சூப்பர்பில் புரோடக்ட்ஸ் நிறுவனத்தின் மேலாளர்கள் இளவரசன் மற்றும் சரவணன் அறக்கட்டளை உறுப்பினர்கள் விஜய ராஜா, மணவாளன் , சார்லஸ் ,பாபு,செந்தில்குமார், ஆறுமுகம் முத்து, விஜய், மூர்த்தி கலந்துகொண்டனர்,
விழாவில் அங்கன்வாடி மையத்துக்கு தேவையான மற்றும் குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள், வழங்கப்பட்டது.






