என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
லாட்டரி விற்ற 2 பேர் கைது
- தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 செல்போன் மற்றும் ரூ.33 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
- இந்த நிலையில் அரியாங்குப்பத்தில் ஒரு தனியார் திருமண மண்டபம் அருகே கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
புதுச்சேரி:
தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 செல்போன் மற்றும் ரூ.33 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
புதுவையில் கேரள லாட்டரி மற்றும் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த தடையை மீறி பலர் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருகிறார்கள்.
அவ்வப்போது போலீசார் இதனை கண்டறிந்து லாட்டரி சீட்டு விற்பவர்களை கைது செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அரியாங்குப்பத்தில் ஒரு தனியார் திருமண மண்டபம் அருகே கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர்.
அப்போது 2 பேர் லாட்டரி முடிவுகளை செல் போன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துக்கொண்டி ருந்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் காக்கையன்தோப்பை சேர்ந்த மாமாமொய்தீன்(50) மற்றும் காஜாமெய்தீன்(48) என்பதும், இவர்கள் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 செல்போன்கள் மற்றும் லாட்டரி விற்பனை பணம் ரூ.33 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.