என் மலர்
புதுச்சேரி

அகில இந்திய மீனவர் சங்க கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளை படத்தில் காணலாம்.
மீனவர்களுக்கு 10 சதவீத தொகுதி ஒதுக்க வேண்டும்
- புதுவைச் சட்டசபைத் தேர்தலில் மீனவர்களுக்கு தனித்தொகுதி ஒதிக்கீடு செய்ய வேண்டும் எனஅகில இந்திய மீனவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
- புதுவையில் மக்கள் தொகையின்படி 3-வது பெரிய சமூகமாக மீனவ சமூகம் உள்ளது.
புதுச்சேரி:
புதுவைச் சட்டசபைத் தேர்தலில் மீனவர்களுக்கு தனித்தொகுதி ஒதிக்கீடு செய்ய வேண்டும் எனஅகில இந்திய மீனவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அகில இந்திய மீனவர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் புதுவை செல்வராஜ் செட்டியார் சிலை அருகே சங்க செயல் தலைவர் பேராசிரியர் பெரியாண்டி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் செயலாளர் மூர்த்தி, அமைப்பாளர் குமார், அமைப்பு செயலாளர்கள் சுயசந்திரன், வடிவேல், நிர்வாகிகள் பத்மநாபன், தலைமணி பரத்குமார், சக்திவேல், மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
புதுவையில் மக்கள் தொகையின்படி 3-வது பெரிய சமூகமாக மீனவ சமூகம் உள்ளது. ஆனால் சட்டசபைத் தேர்தலில் என்றைக்குமே மீனவர்கள், அவர்கள் வாழும் தொகுதிகளில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ வாக வர முடியாதவாறு தொகுதிகள் வரைமுறை செய்யப்பட்டுள்ளன.
சட்டசபையில் பிரிதிநிதித்தும் இல்லாமல் கடந்த 75 ஆண்டுகளாக மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இது ஜனநாயக கோட்பாடுகளுக்கு முற்றிலும் முரணானது. பிரதிநிதிகள் இல்லாத காரணத்தினால் மீனவர்களின் நலன்கள் முற்றிலும் புறக்கணிக்கப் படுகின்றன.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மக்களுக்கு அளிப்பது போல், சட்டசபை தேர்தலில் 10 சதவீத தொகுதி ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதற்காக புதுவை சட்டசபையில் பிரத்யேக சட்டம் இயற்றி மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என்று அகில இந்திய மீனவர் சங்கம் ஜனநாயக சக்திகள் அனைத்தையும் கேட்டுக் கொள்கிறது.
மேற்கண்ட கோரிக்கை களை வலியுறுத்தி அனைத்து மீனவ கிராமங்களையும் ஒன்றிணைத்து போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.






