என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் 107 மையங்களில்எல்.டி.சி.-ஸ்டோர்கீப்பர் பணிக்கு  எழுத்து தேர்வுஆர்வமுடன் இளைஞர்கள் பங்கேற்பு
    X

    பாரதிதாசன் கல்லூரி மையத்தில் எல்.டி.சி. பணிக்கான எழுத்து தேர்வு நடந்த காட்சி.

    புதுவையில் 107 மையங்களில்எல்.டி.சி.-ஸ்டோர்கீப்பர் பணிக்கு எழுத்து தேர்வுஆர்வமுடன் இளைஞர்கள் பங்கேற்பு

    • 65 எல்.டி.சி. எனப்படும் கீழ்நிலை எழுத்தர், 55 பண்டக காப்பாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப போட்டித்தேர்வு
    • புதுவை மாநிலத்தின் 4 பிராந்தியங்களையும் சேர்த்து தேர்வை 49 ஆயிரத்து 904 பேர் எழுது கின்றனர்.

    புதுவை அரசு துறைகளில் காலியாக உள்ள 165

    எல்.டி.சி. எனப்படும் கீழ்நிலை எழுத்தர், 55 பண்டக காப்பாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப போட்டித்தேர்வு இன்று நடந்தது.

    3 ஆயிரம் ஆசிரியர்கள்

    புதுவை மாநிலத்தின் 4 பிராந்தியங்களையும் சேர்த்து தேர்வை 49 ஆயிரத்து 904 பேர் எழுது கின்றனர்.

    தேர்வு பணியில் 3 ஆயிரம் ஆசிரியர்கள், அலுவலர்கள் ஈடுபடுத்தப் பட்டனர்.

    தேர்வர்கள் தங்கள் ஹால் டிக்கெட்டில் பாஸ்போர்ட் போட்டோவை ஒட்டி, கையொப்பமிட்டு எடுத்து வர வேண்டும். ஆதார், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் இதில் ஒரு அசலை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

    ஹால்டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள மையத்தில் காலை 10 மணிக்கு முன்னதாக வர வேண்டும். அதற்கு மேல் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதனால் காலை 8.30 மணி முதலே தேர்வர்கள் மையங்கள் முன்பு திரண்ட னர். தேர்வர்களின் ஹால்டிக் கெட்டை பார்த்து மையத்திற்குள் அனும திக்கப்ட்டனர்.

    செல்போனுக்கு தடை

    அறைகளிலும் பணியில் இருந்த அலுவலர்கள் ஹால்டிக்கெட்டை பெற்று சரி பார்த்தனர்.

    தேர்வு அறைகளில் செல்போன், இயர்போன், கால்குலேட்டர் உட் பட மின் சாதனங்களை எடுத்து செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது.

    இதனால், இவற்றை மீறி தேர்வர்கள் எடுத்து செல்கின்றனரா என சோதனை நடந்தது.

    மீறி மின் சாதனம் வைத்தி ருப்போர் தேர்வு அறைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கயும் விடுக்கப்பட்டது.

    காலை 10 மணிக்கு மையங்களின் நுழைவு வாயில் அடைக்கப்பட்டது. அதன்பிறகு வந்தவர்கள் யாரும் மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. தேர்வை புதுவையில் 37 ஆயிரத்து 329, காரைக்காலில் 5 ஆயிரத்து 534, மாகேவில் ஆயிரத்து 216, ஏனாமில் 2 ஆயிரத்து 825 பேர் எழுது கின்றனர்.

    இவர்களுக்காக புதுவையில் 107, காரைக்காலில் 14, மாகேவில் 6, ஏனாமில் 10 என மொத்தம் 137 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    ஒரு பதவிக்கு 213 பேர் வீதம் 220 பணியிடங்களுக்கு 46 ஆயிரத்து 904 பேர் தேர்வு விண்ணப்பித்தி ருந்தனர். விண்ணப்பித் தோரில் சுமார் 40 ஆயிரத்துக் கும் மேற்பட்டோர் தேர்வு எழுதியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    Next Story
    ×