என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் மூடப்பட்டுள்ள காட்சி, பொதுமக்களை போலீசார் திருப்பி அனுப்பிய காட்சி.
    X
    வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் மூடப்பட்டுள்ள காட்சி, பொதுமக்களை போலீசார் திருப்பி அனுப்பிய காட்சி.

    கொரோனா பரவலால் வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் திடீர் மூடல்

    மத்திய அரசின் தொல்லியல் துறை காட்டுப்பாட்டில் உள்ள வரலாற்று சின்னங்கள், அருங்காட்சியகங்கள் உட்பட அனைத்தும் இன்று முதல் மூட மத்திய அரசு உத்தரவிட்டது.
    நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலையின் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனால் மத்திய அரசின் தொல்லியல் துறை காட்டுப்பாட்டில் உள்ள வரலாற்று சின்னங்கள், அருங்காட்சியகங்கள் உட்பட அனைத்தும் இன்று முதல் மூட மத்திய அரசு உத்தரவிட்டது.

    அதன்படி வேலூர் கோட்டை மற்றும் ஜலகண்டேஸ்வரர் கோவில், அருங்காட்சியகம் உட்பட அனைத்தும் நேற்றிரவு மூடப்பட்டது. அதேபோல் பழைய மசூதி, சமணர் குகை கோவில், மேல்பாடி சுப்ரமணியன் சாமி கோவிலி ஆகியவையும் மூடப்பட்டதாக கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து வேலூர் கோட்டையின் நூழைவு வாயில் கதவு மூடப்பட்டது. மேலும் காந்தி சிலை அருகே திடீரென பேரிகார்டுகள் அமைத்து தடுப்பு வேலி போடப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் யாரும் உள்ளே செல்ல முடியாத வகையில் அங்கு தொல்லியல் துறை ஊழியர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று காலை ஏராளமான பொதுமக்கள் கோட்டை கோவிலில் தரிசனம் செய்யவதற்கும், மைதானத்தில் வாக்கிங் செல்வதற்கும் சென்றனர். அவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.
    Next Story
    ×