search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலை கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
    X

    திருவண்ணாமலை கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 3-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெற்றது.

    10-ம் நாளான 12-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு கோவிலினுள் பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு கோவில் பின்புறமுள்ள 2668 அடிஉயர மலையில் மகா தீபமும் ஏற்றப்பட்டது. இவ்விழாவிவை காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 15 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்திருந்தனர்.

    இந்நிலையில் தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டிருப்பதால் மேலும் விடுமுறை தினமான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர்.

    கட்டண தரிசனம், பொது தரிசன வரிசையில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரை தரிசித்தனர். நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். இன்றும் கூட்டம் அதிகளவில் உள்ளது.

    கார்த்திகை தீபத்திருவிழா முடிந்ததும் அருணா சலேஸ்வரர் கோவிலில் இன்னும் பக்தர்கள் கூட்டம் குறையவில்லை.

    Next Story
    ×