என் மலர்

    செய்திகள்

    திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா: அம்மன் உற்சவம் நாளை தொடக்கம்
    X

    திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா: அம்மன் உற்சவம் நாளை தொடக்கம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா அம்மன் உற்சவம் நாளை தொடங்குகிறது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

    நாளை இரவு கார்த்திகை தீப திருவிழா அம்மன் உற்சவம் தொடங்குகிறது. நாளை காமதேனு வாகனத்தில் துர்க்கை அம்மன் வீதிஉலா நடக்கிறது.

    1-ந் தேதி சிம்ம வாகனத்தில் பிடாரி அம்மன் உற்சவம், 2-ந் தேதி மூஷிக வாகனத்தில் விநாயகர் உற்சவம் நடக்கிறது. 3-ந் தேதி காலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றபடுகிறது.

    நாளை முதல் தினமும் சாமி வீதி உலா நடக்கிறது. 9-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. 12-ந் தேதி அதிகாலை பரணி தீபம், மாலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. கார்த்திகை தீப திருவிழாவையொட்டி அருணாசலேஸ்வரர் கோவில் மின் அங்காரத்தில் ஜொலிக்கிறது.

    தமிழகம் முழுவதும் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கபட உள்ளன. 16 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்க படுகின்றன. மாவட்ட நிர்வாகம் அனுமதி பெற்று அன்னதானம் வழங்க வேண்டுமென அறிவுறுத்தபட்டுள்ளது.

    பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.

    Next Story
    ×