என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாளை ஆடிப்பெருக்கு விழா: பவானி கூடுதுறையில் புதுமண தம்பதிகள் குவிகிறார்கள்
    X

    நாளை ஆடிப்பெருக்கு விழா: பவானி கூடுதுறையில் புதுமண தம்பதிகள் குவிகிறார்கள்

    நாளை ஆடிப்பெருக்கு விழா: பவானி கூடுதுறையில் புதுமண தம்பதிகள் குவிகிறார்கள். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    ஈரோடு, ஆக. 1–

    ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18 அன்று ஆடிப்பெருக்கு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.

    குறிப்பாக காவிரி கரை பகுதி மக்கள் ஆடிப்பெருக்கை ஒரு பண்டிகை போல் சிறப் பாக கொண்டாடி மகிழ்வார் கள்.

    இந்த புனித திருவிழா நாளை வழக்கமான உற் சாகத்துடன் கொண்டாடப் படுகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து பெருக்கெடுத்து வரும் தண்ணீர் இப்போது காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டு கொண்டு செல்கிறது. இதனால் இந்த ஆண்டு ஆடிப் பெருக்கு விழா களை கட்டும்.

    ஆடிப்பெருக்கு விழா உற்சாகமாக ஈரோட்டை அடுத்த பவானி கூடுதுறையில் கொண்டாடப்படுகிறது. காவிரி, பவானி, அமுத நதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் கூடுதுறையில் புனித நீராடி காவிரி தாயை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.

    இதனால் திருமணமான புதுமண தம்பதிகள் பவானி கூடுதுறையில் கூடுகிறார்கள். திருமண நாளில் கழுத்தில் அணிந்த புது மாலையை காவிரி ஆற்றில் விட்டு, ‘‘எங்கள் வாழ்க்கை இதே போல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்’’ என வணங்குவார்கள்.

    மேலும் திருமணமான பெண்கள் காவிரி ஆற்றில் பழைய தாலி கயிற்றை விட்டு தங்கள் கணவனால் புது தாலி கயிற்றை அணிவார்கள். இதே போல் மணமாகாத கன்னிப் பெண்கள் தங்க ளுக்கு விரைவில் திருமணம் நடந்து கண்ணுக்கு நிறைஞ்ச மணாளன் அமைய வேண் டும் என வேண்டி கொள் வார்கள்.

    பவானி கூடுதுறைக்கு நாளை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிவார்கள். என எதிர் பார்க்கப்படுகிறது. இதை யொட்டி பாதுகாப்பு ஏற் பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் இருக்க தடுப்பு கம்பி வேலிகள் அமைக் கப்பட்டுள்ளது. ஆற்றில் குளிக்கும் போது ஆழமான பகுதிக்கு யாரும் சென்று சிக்கி கொண்டால் அவர்களை காப்பாற்ற ஆற்றில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினரும் பரிசல்களில் ரோந்து சுற்ற ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.

    ஆடிப்பெருக்கு விழாவை யொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் மேற் பார்வையில் 200–க்கும் மேற் பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    மேலும் நாளை ஆடி பெருக்கையொட்டி ஆடி அமாவாசை நாளும் சேர்ந்து வருவதால் மிகவும் விசே‌ஷமான நாளாக கருதப்படுகிறது. இதை யொட்டி நாளை கூடுதலாக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளும் பவானி கூடுதுறையில் நடந்து வருகிறது. * * * நாளை ஆடி பெருக்கையொட்டி பவானி கூடுதுறையில் பக்தர்கள் நெரிசல் இன்றி செல்ல தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டுள்ள காட்சி.

    Next Story
    ×